ஞாயிறு, 1 அக்டோபர், 2017

வித்யாரம்பம்-2017 படங்கள்

அரம் அறக்கட்டளை நடத்திய
எழுத்தறிவித்தல்- 2017 விழாவின் படங்கள்:


எழுத்தாளர் சாரு நிவேதிதா

பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன்

காந்தி இன்று - இணையதள நிர்வாகி
மருத்துவர் இரா.சுனில்கிருஷ்ணன்

கவிஞர் கோ.மகுடேசுவரன்


திங்கள், 25 செப்டம்பர், 2017

வித்யாரம்பம் -2017 அழைப்பிதழ்

 ஆறாம் ஆண்டாக அறம் அறக்கட்டளை நடத்தும் எழுத்தறிவித்தல் விழாவின் விளம்பரங்கள்:

சுவரொட்டி- 200 எண்ணிக்கை

பேனர் 2 X 3 - 8 எண்ணிக்கை

சிறிய பிளெக்ஸ் பேனர் 2 X 3 - 8 எண்ணிக்கை

பெரிய பிளெக்ஸ் பேனர் 10  X 8 -  2 எண்ணிக்கை

வித்யாரம்பம் 2017 விழா அழைப்பிதழ்


அறம் அறக்கட்டளை, திருப்பூர்
நடத்தும்
ஆறாம் ஆண்டு எழுத்தவித்தல் விழா- 2017


 நாள்: விஜயதசமி நன்னாள் (30.09.2017) சனிக்கிழமை
நேரம்: காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை
இடம்: அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருகோயில், திருப்பூர்.
திருப்பூரில் நலப்பணிகளை மேற்கொள்ள 2012-இல் நிறுவப்பட்டது அறம் அறக்கட்டளை  (பதிவு எண்: 1432/ 2012).  ‘அறத்தை நாம் காக்க அறம் நம்மைக் காக்கும் என்பதே எமது தாரக மந்திரம்.
தேசிய விழிப்புணர்வுப் பணிகளிலும் கல்விப் பணிகளிலும் ஈடுபட்டுவரும் அறம் அறக்கட்டளை, 2012 முதல் திருப்பூர் அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருகோயிலில் விஜயதசமி நன்னாளில் வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
விஜயதசமி நாளில் துவங்கும் எந்தச் செயலும் மாபெரும் வெற்றி பெறும் என்பது நமது நம்பிக்கை. எனவேதான் அந்நாளில் நமது குழந்தைகளுக்கு கல்விப் பயிற்சியின் துவக்கமான எழுத்தறிவித்தலை நடத்துகிறோம்.  ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்என்ற பழமொழி, நமது சமுதாயம் கல்விக்கு அளித்த மதிப்பை வெளிப்படுத்துகிறது.
அதிலும் குறிப்பாக, சரஸ்வதி கடாட்சம் பெற்ற எழுத்தாளர்கள், ஆசிரியர்களைக் கொண்டே எழுத்தறிவித்தல் நடத்தும் நமது பண்டைய பாரம்பரியத்தை மீட்டுருவாக்கும் வகையில், திருப்பூரில் அறம் அறக்கட்டளை நடத்தும் எழுத்தறிவிதல் விழாக்களில் எழுத்தாளர்களே தங்கள் பொற்கரங்களால் நமது குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கின்றனர்.

இதுவரை இந்நிகழ்வில், எழுத்தாளர்கள் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன், பேராசிரியர் ப.கனகசபாபதி, நடராஜ குருக்கள் (2012), ஜோ.டி.குரூஸ்,   பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன், ஜடாயு.வெங்கடேசன்சரஸ்வதி  (2013), பெருமாள் முருகன், கல்வெட்டு ஆய்வாளர் ராமச்சந்திரன், சூத்திரதாரி கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன் (2014), சா.தேவதாஸ்,  சுப்ரபாரதி மணியன், .வேணுகோபால், கவிஞர் இசை (2015), நாஞ்சில்நாடன்.வே.பசுபதிதஞ்சை வெ.கோபாலன், பி.ஆர்.மகாதேவன் (2016) ஆகியோர் பங்கேற்று நமது குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைத்துள்ளனர்.

இந்த ஆண்டு விஜயதசமியன்று (30.09.2017) நடைபெறும் எழுத்தறிவிதல் விழாவில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, மருத்துவர் இரா.சுநீல்கிருஷ்ணன், பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன், கவிஞர் கோ.மகுடேஸ்வரன், நல்லாசிரியர் எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு,  நெல்லில் அகரமும், குழந்தைகளின் நாவில் ஓங்காரமும் எழுதி, நமது குழந்தைகளின் கல்விப் பயணத்தை இனிதே துவக்கிவைத்து ஆசீர்வதிக்கின்றனர்.

இறைருளும் குருவருளும் துணைகொண்டு நமது குழந்தைகள் கல்வியில் உயர்ந்து, நாட்டின் சிறந்த குடிமக்களாக வேண்டும். இதுவே அறம் அறக்கட்டளையின் நோக்கம்; பிரார்த்தனை.


இந்த ஆண்டு எழுத்தறிவிக்கும் ஆசான்கள்:

எழுத்தாளர் சாரு நிவேதிதா 

தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க இயலாத ஒரு குரல் சாரு நிவேதிதா (64). நாகப்பட்டினம் சொந்த ஊர்; சென்னையில் வசிக்கிறார். அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன. புதிய எக்ஸைல், ஸீரோ டிகிரி, ராஸ லீலா உள்ளிட்ட 6 புதினங்களும்,  கோணல் பக்கங்கள், தப்புத் தாளங்கள், மனம்கொத்திப் பறவை, வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் உள்ளிட்ட 30 கட்டுரைத் தொகுப்புகளும் இவரது படைப்புகள். புனைவல்லாத இலக்கியம், கட்டுரைகள் , ிரைப்பட விமர்சனம் ஆகியவற்றில் மிகவும் சிறப்புடன் செயல்படுபவர்.

மருத்துவர் இரா.சுநீல்கிருஷ்ணன்

ஆயுர்வேத மருத்துவரான சுநீல்கிருஷ்ணன் (31), காரைக்குடியில் வசிக்கிறார். மகாத்மா காந்தி மீது அளவற்ற பற்றுடையவர். அதற்காகவே காந்தியம் குறித்த படைப்புகளின் களஞ்சியமாக ‘காந்தி இன்றுஎன்ற இணையதளத்தை (www.gandhitoday.inதனியொருவராக நடத்தி வருகிறார். காந்தி- எல்லைகளுக்கு அப்பால் என்ற இவரது நூலை சொல்புதிது பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ராஜ்மோகன் காந்தியின் நூல், க்‌ஷித்தி மோகனின் ஹிந்துத்தவ்ம் என்ற நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன்

பத்திரிகையாளரான பி.ஆர்.ஹரன் (), சென்னையில் வசிக்கிறார். 20 ஆண்டுகள் விற்பனைப் பிரதிநிதியாக இருந்தவர், 2004 முதல் ஊடகங்களில் பணிபுரிகிறார். ஹிந்து மித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியர், அகில இந்திய வானொலியின் பகுதி நேர ஒருங்கிணைப்பாளர், இணைய எழுத்தாளர், ஹைந்தவ கேரளம், ஆர்கனைசர், நியூஸ் டுடே பத்திரிகைகளில் பத்தி எழுத்தாள்ர், திண்ணை, விஜயவாணி, தமிழ்ஹிந்து, பாரத பாரதி உள்ளிட்ட இனைய இதழ்களில் எழுதி வருகிறார். இவரது இரு நூல்கள் தற்போது அச்சில் உள்ளன. திருக்கோயில் பக்தர் சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார்.

கவிஞர் கோ.மகுடேஸ்வரன்

திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி ஆலோசகராகப் பணி புரியும் கோ.மகுடேஸ்வரன் (42), நல்லூரில் வசிக்கிறார். கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், இலக்கண அறிஞர், மொழி ஆய்வாளர், குறள் உரைஞர், திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா எனப் பன்முக ஆளுமை உடையவர். பூக்கள் பற்றிய தகவல்கள், அண்மை, யாரோ ஒருத்தியின் நடனம், காமக்கடும்புனல்,  குமரன் காவியம், காந்தி அண்ணல்புலிப்பறழ், பாட்டுத்திறம், தன்வெறியாடல், விலைகள் தாழ்வதில்லை, திருக்குறள் உரை உளீட்ட பல நூல்களை எழுதியுள்ளார். தினமலர்- பாடம், பக்தி விகடன், தி இந்து உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.

நல்லாசிரியர் எஸ்.பாலகிருஷ்ணன்
திருப்பூர், தேவாங்கபுரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 40 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் எஸ்.பாலகிருஷ்ணன் (). திருப்பூர் ஓம்சக்தி கோயில் அருகே வசிக்கிறார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருதை 1984-இல் பெற்றார். மூன்று தலைமுறை மாணவர்களை சிறந்த தரத்துடன் உருவாக்கியவர்.
தொடர்புக்கு:

ஸ்ரீ.பக்தவத்சலம்-  98422 27505
கு.சிவகுமார்- 98949 33877


புதன், 12 அக்டோபர், 2016

எழுத்தறிவித்தல் 216 படங்கள்

அறம் அறக்கட்டளை நடத்திய எழுத்தறிவிதல் விழா- 2016 படங்கள்...

திருவையாறு பாரதி இலக்கிய பாசறையின்
நிறுவனர் தஞ்சை வெ.கோபாலன்

எழுத்தாளர் பி.ஆர்.மகாதேவன்

தேசிய சிந்தனைக் கழகத்தின்
மாநிலத் தலைவர் ம.வே.பசுபதி

சாஹித்ய அகாடமி விருது பெற்ற
எழுத்தாளர் நாஞ்சில்நாடன்
புதன், 5 அக்டோபர், 2016

எழுத்தறிவித்தல் -2016 அழைப்பிதழ்

அறம் அறக்கட்டளை நடத்தும் ஐந்தாம் ஆண்டு எழுத்தறிவித்தல் விழா தொடர்பான விளம்பரங்கள் இங்கே உள்ளன.

சுவரொட்டி விளம்பரம்

பிளெக்ஸ் பேனர் விளம்பரம்

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

வித்யாரம்பம்- 2015 அழைப்பிதழ்
அறம் அறக்கட்டளை சார்பில் நான்காவது ஆண்டாக இந்த ஆண்டும்  ‘எழுத்தறிவித்தல் விழா’ சிறப்பாக நடைபெற உள்ளது.

திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், விஜயதசமியன்று (22.10.2015, வியாழக்கிழமை)  காலை 7.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை, இந்நிகழ்வு ஏற்பாடாகி உள்ளது.

கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் ஆசி பெற்றவர்களாக நாம் எழுத்தாளர்களைக் கருதுகிறோம். அத்தகைய எழுத்தாளர்களின் திருக்கரங்களால் குழந்தைகளுக்கு எழுத்தறிவிப்பது கலைவாணியின் அருள் பெறுவது போல.

இந்த ஆண்டு எழுத்தறிவிப்போர்:
  • திரு. சா.தேவதாஸ்
              சாஹித்ய அகாதெமி விருதாளர்
.
  • திரு. சுப்ரபாரதி மணியன்
               எழுத்தாளர்
.
  • திரு. சு.வேணுகோபால்
              ‘வெண்ணிலை’ நாவலாசிரியர்
.
  • திரு. இசை
               கவிஞர்
.
-இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, பள்ளி செல்லத் தயாராக உள்ள தங்கள் குழந்தைகளுக்கு ‘வித்யாரம்பம்’ செய்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறோம்.


  • அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.
  • முன்பதிவுக்கு:  98422 27505,  98949 33877,  95009 57080


..

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

சுதந்திர தினத் திருவிழா- 2015 சிறு தொகுப்பு


சமூகசேவகர் கூத்தம்பாக்கம் இளங்கோவுக்கு

அறச்செம்மல்-2015 விருது வழங்கியது 

அறம் அறக்கட்டளை

.

திருப்பூரில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில்,  சமூகசேவகர் கூத்தம்பாக்கம் ஆர்.இளங்கோவுக்கு 2015-ஆம் ஆண்டுக்கான அறச்செம்மல் விருதை வழங்குகிறார் எழுத்தாளர் ஜோ டி குரூஸ். உடன் (வலமிருந்து) அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியன், இயற்கை ஆர்வலர் அம்மாபாளையம் வேலுசாமி ஆகியோர்.

.
திருப்பூர், ஆக. 17: கூத்தம்பாக்கம் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக உருவாக்கிய சமூகசேவகர் திரு. ஆர்.இளங்கோவுக்கு திருப்பூர் அறம் அறக்கட்டளை, 2015-ஆம் ஆண்டுக்கான அறச்செம்மல் விருதை வழங்கியது. இவ்விருது அறம் அறக்கட்டளை நடத்திய நான்காம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வழங்கப்பட்டது. 

திருப்பூரில் இயங்கும் அறக்கட்டளை அமைப்பு ஆண்டுதோறும் அறச்செம்மல் விருதினை சுதந்திரதின விழாவில் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு நான்காம் ஆண்டாக, அறம் அறக்கட்டளை நடத்திய சுதந்திர தின விழா, சனி, ஞாயிறு (ஆகஸ்ட் 15, 16) இரண்டு நாட்கள் திருப்பூர் டவுன்ஹாலில் நடைபெற்றது. 

ஆக. 15, சனிக்கிழமை காலை 8 மணியளவில் நடைபெற்ற தேசியக் கொடியேற்றும் நிகழ்வுக்கு காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் திரு. ஓ.கே.டெக்ஸ் எம்.கந்தசாமி தலைமை வகித்தார். மகாகவி வித்யாலயா பள்ளி மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றனர்.
.
கலாம் குறித்த கருத்தரங்கில் பேசுகிறார் எம்.ஹரிஹரசுதன் (அதிமுக).
.
அதைத் தொடர்ந்து  ‘கலாமின் கனவுகள் என்ற தலைப்பில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் பேசினர். ஜேசிஸ் அமைப்பின் தலைவர் திரு. என்.சம்பத்குமார் தலைமை வகித்தார். திருவாளர்கள் எம்.ஹரிஹரசுதன் (அதிமுக), பா.சசிகுமார் (மதிமுக), வழக்கறிஞர் எம்.ராமகிருஷ்ணன், எஸ்.சுந்தரபாண்டியன் (ஆம் ஆத்மி), அ.பார்த்திபன் (பாஜக), மு.சுரேஷ்பாபு (காந்திய மக்கள் இயக்கம்) ஆகியோர், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவுகளுடன் தங்கள் கனவுகளை விவரித்தனர். 
 .
கலாம் குறித்த கருத்தரங்கில் நிறைவுரையாற்றுகிறார் பேரா. இரா.ஸ்ரீனிவாசன்.

.
இறுதியில், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில இணை அமைப்பாளர் திரு. இரா.ஸ்ரீனிவாசன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்,  “ஒரு நாடு வல்லரசாக, பொருளாதாரத்தில் வலுவாக வேண்டும். அதற்கு இயற்கை வளம், மக்கள் வளம், கலாசார வளம் ஆகிய மூன்றும் அடிப்படைத் தேவைகள்” என்று கலாம் கூறியதை நினைவுகூர்ந்தார். 
 .
களப்பணியாளர் அறிமுகத்தில் பேசுகிறார் காடையூரில் கொங்க கோசாலையை நடத்திவரும் விஜயாபுரம் வி.சிவகுமார்.
.
மாலை நடைபெற்ற களப்பணியாளர் அறிமுக நிகழ்ச்சியில் அம்மாபாளையத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் வேலுசாமியும், காடையூரில் கொங்க கோசாலையை நடத்திவரும் வி.சிவகுமாரும் கௌரவிக்கப்பட்டனர். இவர்களுள் முதியவர் திரு.வேலுசாமி தனது 77 வயதிலும், ம்ரங்களை நட்டு வளர்ப்பதை தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அதேபோல, அமெரிக்காவில் பொறியாளராகப் பணியாற்றிய விஜயாபுரம் இளைஞர் திரு.வி.சிவகுமார் நாட்டுப்பசு இனத்தைக் காப்பதற்காக தனது தொழிலைக் கைவிட்டு காடையூரில் கொங்க கோசாலையை நடத்தி வருகிறார். 
.
விவேகானந்தா பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி.
.
அடுத்து கே.செட்டிபாளையம் விவேகானந்த வித்யாலயா, ஆஷர் நகர் வித்யாமந்திர் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
 .
ஏற்புரை வழங்குகிறார் ’அறச்செம்மல்’ கூத்தம்பாக்கம் ஆர்.இளங்கோ.
.
முதல்நாள் நிகழ்வுகளின் நிறைவாக, நிறைவாக, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கூத்தம்பாக்கம் கிராமத்தை தமிழகத்தின் முன்மாதிரி கிராமமாக உருவாக்கியவரும், மேலும் பல கிராமங்கள் முன்னேற்ற வழிகாட்டி வருபவருமான சமூகசேவகர் திரு. ஆர்.இளங்கோவுக்கு 2015-ஆம் ஆண்டுக்கான அறச்செம்மல் விருது வழங்கப்பட்டது. இதனை சாஹித்ய அகாதெமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் திரு. ஜோ டி குரூஸ் வழங்கி, சுதந்திர தினச் சிறப்புரையாற்றினார்.
 .
சுதந்திர தின சிறப்புரையாற்றுகிறார் எழுத்தாளர் ஜோ டி குரூஸ்.
 .
“சுதந்திரம் என்பது கட்டுப்பாட்டுக்கு உள்பட்டது. நாம் ஒவ்வொருவரும் தேசத்தின் பெருமையை உணர்ந்து அதன் பிள்ளைகள் நாம் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்’’ என்று தனது சிறப்புரையில் எழுத்தாளர் திரு. ஜோ டி குரூஸ் குறிப்பிட்டார்.
 .
இரண்டாம் நாள் நிகழ்வு:
.
ஆக. 16, ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் இரண்டாம் நாள் நிகழ்வுகள் துவங்கின. சாஹித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. ஜோ டி குரூஸுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
 .
என்.ஸ்ரீராம் தலைமையிலான குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி
 .
மாலை 3.00 மணியளவில், சங்கீத கலாபீடம் நிறுவனர் திரு. என்.ஸ்ரீராம் தலைமையிலான குழுவினரின் தேசபக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாளர்கள் சுதர்சன், தஞ்ஜெயன், ராகுல், தேவஸ்ரீ ஆகியோர் அடங்கிய இக்குழு அற்புதமான தேசபக்திப் பாடல்களை வழங்கியது.
.
அம்பேத்கர் குறித்துப் பேசுகிறார் எழுத்தாளர் ம.வெங்கடேசன்
 .
அதைத் தொடர்ந்து, டாக்டர் அம்பேத்கர் 125-வது ஆண்டு சொற்பொழிவு நிகழ்ச்சியில் எழுத்தாளர் திரு.ம.வெங்கடேசன் கலந்துகொண்டு பேசினார். சிபிசி ஃபேஷன்ஸ் உரிமையாளர் திரு. விஜயகுமார் தலைமை வகித்தார். திரு.ம.வெங்கடேசன் தனது உரையில், “விடுதலைப்போரில் நேரடியாகப் பங்கேற்காதபோதும், டாக்டர் அம்பேத்கர் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலனுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் போராடினார். அவரது முயற்சியால் உருவான சட்டங்களின் பலனையே நாம் இப்போது அனுபவிக்கிறோம்’’ என்றார். 
.
பேரா.தா.ராஜாராம் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றம்

 .
இறுதியாக, பேராசிரியர் திரு. நாகர்கோவில் தா.ராஜாராம் தலைமையில், ‘தேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடுவது கல்வியா? பொதுநல உணர்வா?என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.  ‘கல்வியே’ அணியில், ராஜபாளையம் ஆசிரியர் திரு.ஆர்.ராஜ்குமார் (அணித் தலைவர்), சென்னிமலை தமிழாசிரியர் திரு. என்.சரவணன், திருப்பூர் மகாகவி வித்யாலயா பள்ளி தாளாளர் திரு. மணி ஆகியோர் பேசினர். ’பொதுநல உணர்வே’ என்ற அணியில் திருவில்லிப்புத்தூர் திருமதி இந்திரா ஜெயச்சந்திரன் (அணித் தலைவர்), வழக்கறிஞர் திரு. அ.பார்த்திபன், திரு. ஜேசி மு.சுரேஷ்பாபு ஆகியோர் பேசினர். இறுதியில் நடுவர்  ‘தேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடுவது கல்வியே’ என்று தீர்ப்பளித்தார்.
 .
திருப்பூர், குமரன் சாலையிலுள்ள குமரன் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தும் எழுத்தாளர்கள் ஜோ டி குரூஸ், ம.வெங்கடேசன்.
 .
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அறம் அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம், நிர்வாகிகள் சிவகுமார், சுரேஷ்பாபு, உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

.