வெள்ளி, 14 டிசம்பர், 2012

அம்பேத்கர் நினைவுதின நிகழ்ச்சி- செய்திகடந்த டிசம்பர் 6 ம் தேதி, திருப்பூர், சின்னக்கரையில் உள்ள  பார்க் கலை அறிவியல் கல்லூரியில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கான ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அறம்  அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர்  சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பார்க் கல்லூரியின் செயலர் பி.ரகுராஜன், சி.பி.சி. பேஷன்ஸ் நிறுவன இயக்குனர் டி.ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவேகானந்தா  ஐ.ஏ.எஸ். அகாடமியின் செயலர் நா. பாரதி, அறிமுக உரையாற்றினார். அவர் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பின் நடைமுறைகள் குறித்து விளக்கினார். புதுதில்லியில் உள்ள சங்கல்ப் ஐ.ஏ.எஸ். போரம் அமைப்புடன் இணைந்து இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சென்னையைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு நிபுணர் ஜா. ராஜகோபாலன் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, ஆற்றல் மேம்பாடு  குறித்து சிறப்புரையாற்றினார் (படம்-1).   வழக்கறிஞர் அ. பார்த்திபன் டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தி பேசினார். பொறியாளர் வீர.ராஜமாணிக்கம் நன்றியுரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 200க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர் (படம்- 2).


காண்க:
சங்கல்ப் ஐ.ஏ.எஸ். போரம் 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக