செவ்வாய், 23 அக்டோபர், 2012

திருப்பூரில் நாளை "எழுத்தறிவித்தல்' விழா



திருப்பூர், அக்.  22: விஜயதசமித் திருநாளையொட்டி, அறம் அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நாளை (புதன்கிழமை) எழுத்தறிவித்தல் விழா நடைபெறுகிறது.

அறம் அறக்கட்டளை மற்றும் சக்தி மாரியம்மன் டிரஸ்ட் சார்பில், புதன்கிழமை காலை 7 மணியளவில் நடைபெறும் எழுத்தறிவித்தல் விழாவுக்கு அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டத் தலைவர் எம்.ரத்தினம் செட்டியார் தலைமை வகிக்கிறார். கோவில் செயல் அலுவலர் சி.பாலமுருகன், சக்தி மாரியம்மன் டிரஸ்ட் தலைவர் தரணி மணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

அலகுமலை ஸ்ரீ தபோவனத்தின் நிறுவனர் சுவாமினி குகப்பிரியானந்த சரஸ்வதி ஆசி வழங்குகிறார். இதில், "ஈஷாவாஸ்ய உபநிடதம்' தமிழாக்க நூலை எழுத்தாளர் சூத்ரதாரி கோபாலகிருஷ்ணன் வெளியிடுகிறார்.

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், கோவில் மூத்த அர்ச்சகர் எஸ்.என்.நடராஜ குருக்கள், ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன், கோவை நகரியல் பயிற்சி மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ப.கனகசபாபதி உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்று குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கின்றனர்.
விஜயதசமி சொற்பொழிவு: திருப்பூர், கருவம்பாளையம் சன்மார்க்க சங்கத்தில் விஜயதசமி சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.

இதற்கு, திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் சக்தி எம்.சுப்பிரமணியம் தலைமை வகிக்கிறார். சன்மார்க்க சங்க ஒருங்கிணைப்பாளர் கே.பி.கே. பாலசுப்ரமணியம் முன்னிலை வகிக்கிறார்.

இதில், எழுத்தாளர் ஜெயமோகன், ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன், இணைய எழுத்தாளர் ஜடாயு ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


- தினமணி (23.10.2012)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக