வியாழன், 2 அக்டோபர், 2014

எழுத்தறிவித்தல் விழா- தினமணி செய்தி


அறம் அறக்கட்டளை
சார்பில் நாளை
எழுத்தறிவித்தல் விழா


திருப்பூர், அக். 1: திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் வெள்ளிக்கிழமை (அக். 3 - நாளை) திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் எழுத்தறிவித்தல் விழா நடைபெறவுள்ளது.

விஜயதசமியன்று எழுத்தறிவித்தலுடன் குழந்தைகளுக்கு கல்வியைத் துவங்குவது நமது மரபு. திருப்பூர் அறம் அறக்கட்டளை எழுத்தாளர்களைக் கொண்டு வித்யாரம்பம் நிகழ்ச்சியை கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூரில் நடத்தி வருகிறது.

மூன்றாவது ஆண்டாக இம்முறை திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் எழுத்தறிவித்தல் விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் கல்வெட்டு ஆய்வாளர் ராமசந்திரன், எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், சூத்திரதாரி கோபாலகிருஷ்ணன், கவிஞர் மோகனரங்கன் உள்ளிட்டோர் பங்கேற்று குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ளதாக, அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.