சனி, 20 அக்டோபர், 2018

எழுத்தறிவித்தல் விழா-2018 படத் தொகுப்பு

அறம் எழுத்தறிவித்தல்-2018  விழா நிகழ்வுகள்...

ஆசியுரை வழங்கும் கவிஞர் திரு. மரபின் மைந்தன் முத்தையா.

ஆசியுரை வழங்கும் திரு. ஹரன் பிரசன்னா.

ஆசியுரை வழங்கும் ஆசிரியர் திரு. ஆதலையூர் சூரியகுமார்.

ஆசியுரை வழங்கும் நல்லாசிரியை திருமதி மு.கற்பகம் ராமசாமி.

எழுத்தறிவிக்கும் கவிஞர் திரு.மரபின் மைந்தன் முத்தையா

எழுத்தறிவிக்கும் திரு. ஹரன் பிரசன்னா.

எழுத்தறிவிக்கும் நல்லாசிரியை திருமதி. கற்பகம் ராமசாமி.

எழுத்தறிவிக்கும் ஆசிரியர் திரு. ஆதலையூர் சூரியகுமார்.

புதன், 17 அக்டோபர், 2018

வித்யாரம்பம்-2018: எழுத்தறிவிக்கும் ஆசான்கள்



அறம்- எழுத்தறிவித்தல் விழா-2018

.
நாள்: விஜயதசமி நன்னாள், 19.10.2018, வெள்ளிக்கிழமை
நேரம். காலை: 8.00 மணி முதல் 11.00 மணி வரை.
இடம்: அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில், திருப்பூர்.

அனுமதி இலவசம்... முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு:
ஸ்ரீ.பக்தவத்சலம்- 94865 93100,
கு.சிவகுமார்- 98949 33877

***

இந்த ஆண்டு எழுத்தறிவிக்கும் ஆசான்கள்:

.
கவிஞர் திரு. திரு. மரபின்மைந்தன் முத்தையா:
.
கோவைக்குப் புகழ் சேர்க்கும் எழுத்தாளர்களுள் ஒருவரான திரு. முத்தையா (50), மரபுக்கவிதைகள் மீதான பற்றால் ‘மரபின்மைந்தன் முத்தையா’ என்று அறிவித்துக் கொண்டவர். சமூகவியலில் இளநிலைப் பட்டமும், தகவல் தொடர்பியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். இதுவரை 64 நூல்களை எழுதி இருக்கிறார். 
‘நமது நம்பிக்கை’ என்ற சுயமுன்னேற்ற மாத இதழை நடத்தி வருகிறார். ஈஷா யோக மையம், வெற்றித் தமிழர் பேரவை, சிகரம் போன்ற  பொது அமைப்புகளில் ஈடுபாடு உடையவர். 
படைப்பாளி, கவிஞர், இதழாளர், மேடைப் பேச்சாளர், சுய முன்னேற்றப் பயிற்சியாளர் எனப் பண்முகம் கொண்டவர்; 
பல விருதுகளுக்கு சொந்தக்காரர். 
.
திரு. ராம.நம்பிநாராயணன்:
.
தென்திருப்பேரையைப் பூர்வீகமாகக் கொண்ட திரு.நம்பிநாராயணன் (59), ராமநாதபுரத்தில் வசிக்கிறார். கட்டுமானப் பொறியியலில் பட்டயம் படித்தவர். சமூகப்பணிக்காக தான் பணியாற்றிவந்த அரசுப் பணியை உதறி முழுநேரப் பணியாளரானவர். தமிழகத்தின் மூத்த இதழாளர்களுள் ஒருவர். 
சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தமிழக அமைப்பாளராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது பாஜகவின் ‘ஒரே நாடு’ மாதமிருமுறை 
இதழின் பொறுப்பாசிரியராக செயல்படுகிறார். 
தேசியம் சார்ந்த சிந்தனையுடன் கூடிய 
ஆயிரக் கணக்கான கட்டுரைகளை எழுதி இருக்கிறார். 
பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

திரு. வி.ஹரன்பிரசன்னா:

சென்னையில் வசிக்கும் நெல்லைக்காரரான திரு. ஹரன்பிரசன்னா (42), வேதியியலில் இளநிலைப் பட்டம் பெற்றவர். தமிழின் முன்னணிப் பதிப்பகமான கிழக்குப் பதிப்பகத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். 
தமிழ்ஹிந்து.காம் என்ற இணையதளத்தை நிறுவியவர்களுள் ஒருவர். கவிதை, கட்டுரை சார்ந்து 4 நூல்களை எழுதி இருக்கிறார். 
‘வலம்’ என்ற மாத இதழின் ஆசிரியராக உள்ளார். 
.
முனைவர் ஆதலையூர் த.சூரியகுமார்:
.
கும்பகோணம் அருகிலுள்ள ஆதலையூர் கிராமத்தைச் சார்ந்த திரு. த.சூரியகுமார் (42), தமிழ் இலக்கியத்தில் முதுநிலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். 
மேலும், வரலாறு பாடத்தில் முதுநிலை பட்டமும், 
ஆய்வியல் நிறைஞர் பட்டமும், கல்வியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர்.  ஆசிரியப் பணியில் 16 ஆண்டுகால அனுபவம். மதுரை – மேலூரில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், சுய முன்னேற்றப் பயிற்சியாளர் எனப் பண்முகங்களை உடையவர்; 25-க்கு மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கிறார். தமிழக அரசின் ‘கனவு ஆசிரியர்’ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளராக உள்ளார்.
.
திருமதி மு.கற்பகம்:
காங்கயம் வட்டம், வெள்ளக்கோவில் கிராமத்தில், 
விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான திருமதி கற்பகம் ராமசாமி (52),  திருப்பூர், முருகம்பாளையத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். பி.லிட். பட்டம் பெற்றவர். 
ஆசிரியர் பணியில் 22 ஆண்டுகால அனுபவம். 
தற்போது திருப்பூர், கவிதாலட்சுமி நகரில் உள்ள திருப்பூர் வடக்கு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணி புரிகிறார்.17 மாணவர்களுடன் மிகவும் பின்தங்கியிருந்த அந்தப் பள்ளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, பெற்றோருக்கு நம்பிக்கையூட்டி, 162 மாணவ மாணவிகள் பயிலும் பள்ளியாக இதனை மாற்றி இருக்கிறார்.தற்போது கணவர் முருகானந்தம், மகனுடன் 15 வேலம்பாளையத்தில் வசிக்கிறார். 2018 ஆண்டுக்கான தமிழக அரசின் 
ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.


புதன், 10 அக்டோபர், 2018

செவ்வாய், 9 அக்டோபர், 2018

அறம்- எழுத்தறிவித்தல் விழா-2018 அறிவிப்பு



அறம் அறக்கட்டளை, திருப்பூர்

(பதிவு எண்: 1432/ 2012).

திருப்பூர் ஸ்ரீ சக்தி இன்ஸ்டிட்யூஷன்ஸ்

இணைந்து நடத்தும்

எழுத்தறிவித்தல் விழா- 2018

***

நாள்: விஜயதசமி நன்னாள், 19.10.2018, வெள்ளிக்கிழமை

நேரம். காலை: 8.00 மணி முதல் 11.00 மணி வரை.

இடம்: அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில், திருப்பூர்.

எழுத்தறிவிக்கும் திருவாளர்கள்:

  • கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா,  கோவை.
  • பத்திரிகையாளர் ராம.நம்பிநாராயணன்,  ராமநாதபுரம்.
  • ‘வலம்’ இதழின் பொறுப்பாசிரியர் வி.ஹரன் பிரசன்னா, சென்னை. 
  • கனவு ஆசிரியர் ஆதலையூர் த.சூரியகுமார்,  மதுரை.
  • நல்லாசிரியை மு.கற்பகம் ராமசாமி, திருப்பூர்.

அனுமதி இலவசம்...
முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு:

ஸ்ரீ.பக்தவத்சலம்- 94865 93100


கு.சிவகுமார்- 98949 33877


-------------------------------------

சனி, 6 அக்டோபர், 2018

வித்யாரம்பம்- 2018 அழைப்பிதழ்




அறம் அறக்கட்டளை, திருப்பூர், 

திருப்பூர் ஸ்ரீ சக்தி இன்ஸ்டிட்யூஷன்ஸ்

 இணைந்து நடத்தும் 


ஏழாம் ஆண்டு எழுத்தறிவித்தல் விழா- 2018


திருப்பூரில் நலப்பணிகளை மேற்கொள்ள 2012-இல் நிறுவப்பட்டது அறம் அறக்கட்டளை (பதிவு எண்: 1432/ 2012). ‘அறத்தை நாம் காக்க அறம் நம்மைக் காக்கும்’ என்பதே எமது தாரக மந்திரம்.

தேசிய விழிப்புணர்வுப் பணிகளிலும் கல்விப் பணிகளிலும் ஈடுபட்டுவரும் அறம் அறக்கட்டளை, 2012 முதல் திருப்பூர் அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருகோயிலில் விஜயதசமி நன்னாளில் வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

விஜயதசமி நாளில் துவங்கும் எந்தச் செயலும் மாபெரும் வெற்றி பெறும் என்பது நமது நம்பிக்கை. எனவேதான் அந்நாளில் நமது குழந்தைகளுக்கு கல்விப் பயிற்சியின் துவக்கமான எழுத்தறிவித்தலை நடத்துகிறோம். ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்ற பழமொழி, நமது சமுதாயம் கல்விக்கு அளித்த மதிப்பை வெளிப்படுத்துகிறது.