வியாழன், 27 செப்டம்பர், 2012

காந்தி ஜெயந்தி விழா அழைப்பிதழ்


அறம் அறக்கட்டளையின் முதல் நிகழ்ச்சியாக, மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக். 2 அன்று, காந்தி ஜெயந்தி விழா திருப்பூரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

 அதன் அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சிநிரல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.  அனைவரும் வருக!


 (பெரிதாகக் காண, அழைப்பிதழின் மீது சொடுக்கவும்)
 ***

அறத்தை நாம் காக்க அறம் நம்மைக் காக்கும்


அறம் அறக்கட்டளை- திருப்பூர்,
A.
குழந்தைவேலு முதலியார் நாச்சம்மாள் அறக்கட்டளை,
சர்வோதய கதர் ஊழியர் சங்கம்
இணைந்து நடத்தும்...

காந்தி ஜெயந்தி விழா
            நாள் : அக்டோபர் 2, 2012, செவ்வாய்க்கிழமை.

பொது விழா இடம்  : காமாட்சியம்மன் கல்யாண மண்டபம்,
                 பஸ் நிலையம் பின்புறம், திருப்பூர்.
                   நேரம் : காலை 9.30 மணி.


கூட்டுப் பிரார்த்தனை: காந்தி நினைவு மண்டபம், காந்தி நகர்,
                 நேரம் : மாலை 4.00 மணி


நிகழ்ச்சி நிரல்

இடம்: காமாட்சியம்மன் கல்யாண மண்டபம்,
      பஸ் நிலையம் பின்புறம், திருப்பூர்.

தேசியக் கொடியேற்றம்: காலை 9.30 மணி
 
தமிழ்த்தாய் வாழ்த்து
 
தலைமை  : திரு. K .பரஞ்சோதி
           தலைவர், A.குழந்தைவேலு முதலியார் நாச்சம்மாள் அறக்கட்டளை,
           தி சென்னை சில்க்ஸ் நிறுவனங்கள், திருப்பூர்.

முன்னிலை : திரு. N.அருணாசலம்
            நேஷனல் சில்க்ஸ் & நேஷனல் காதி வஸ்திராலயம், திருப்பூர்.

            திரு.V.தெய்வ சிகாமணி
            கீதா மெடிக்கல்ஸ், திருப்பூர்.

            திரு. A.பழனிசாமி கவுண்டர்
            திருமலை டையிங், திருப்பூர்.

வரவேற்புரை: ஆடிட்டர் திரு. C.சிவசுப்பிரமணியன்
             தலைவர், அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

திருவிளக்கு ஏற்றுதல்

                     மகளிர் உறுப்பினர்கள்,  
                    A.குழந்தைவேலு முதலியார் நாச்சம்மாள் அறக்கட்டளை, திருப்பூர்.  

நல்லாசிரியர்களுக்கு பாராட்டு: திரு. G.வீரப்பிரகாசம்
            முன்னாள் தலைவர், தமிழ்நாடு சர்வோதய சங்கம்

தியாகிகளை கௌரவித்தல்: திரு. M .ரத்தினம் செட்டியார்
           தலைவர், அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம், திருப்பூர்.

வாழ்த்துரை: திரு. V.T.சுப்பிரமணியன்
            தலைவர், திருப்பூர் கலை இலக்கியப் பேரவை.

சிறப்புரை : காந்தியத்தின் இன்றைய தேவை
          முனைவர் R.ஸ்ரீநிவாசன், MBA, PhD.,              
                    காந்திய சிந்தனையாளர்,
          
          பேராசிரியர், சாஸ்திரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

நன்றியுரை: திரு. S.நாராயணன்அறம் அறக்கட்டளை

தேசிய கீதம்
***

தேசிய ஒருமைப்பாட்டுக்காக கூட்டுப் பிரார்த்தனை

இடம் : மகாத்மா காந்தி நினைவு மண்டபம்,
     சர்வோதய சங்க வளாகம், காந்திநகர், திருப்பூர்.

நேரம் : மாலை: 4.00 மணி
வரவேற்புரைதிருவீர. ராஜமாணிக்கம், அறம் அறக்கட்டளை
தலைமை : பூஜ்யஸ்ரீ சுவாமினி குகப்பிரியானந்த சரஸ்வதி
           நிறுவனர், ஸ்ரீ தபோவனம் ஆசிரமம், அலகுமலை.

முன்னிலை:  திரு. P.R.நடராஜன்
            மாநில பொதுச்செயலாளர்,  
            சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதி.

            திரு. M.அகமது பைசல்
            செயலாளர், குர்பானி அறக்கட்டளை, திருப்பூர்.

            திரு. T.R.விஜயகுமார்
            திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு

            திரு. Dr. K.கிங் நார்சியஸ்
            தலைவர், தமிழ்நாடு அரசு ஹோமியோபதி மருத்துவர் சங்கம்

சிறப்புரை  : திரு. T.R.முரளிதரன்
           செயலாளர், தேவலோக அன்பு நிலையம் அறக்கட்டளை, திருப்பூர்.

           திரு. விஸ்வாஸ் G.ராமசாமி
           விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கே.செட்டிபாளையம்.

           திரு. A.கிருஷ்ணமூர்த்தி, 
           மாநிலப் பொருளாளர், காந்திய மக்கள் இயக்கம்

நன்றியுரை: திரு. K.சிவகுமார்,  அறம் அறக்கட்டளை.  

அனைவரும் வருக!

***
.

அறம் வளர்ப்போம்!


அன்புள்ள நண்பர்களுக்கு,

அறம் - பாரத மண்ணில் பல பொருள் தரும் அற்புதமான ஒரு சொல்.

அறத்தால் வருவதே இன்பம் என்பார் திருவள்ளுவர்.
அறம் வளர்த்த நாயகி என்பது நாம் வழிபடும் இறைவியின் பெயர்.

அறம், பொருள் இன்பம், வீடு என்பதே வாழ்வின் லட்சியம் என்ற மகத்தான லட்சியம் வாழ்வு நம்மிடம் உண்டு.

அந்த அறம் தான் நம்மைக் காக்கிறது. இந்த உலகம் தனது அறம் தவறாமல் சுழல்வதால் தான் நாம் வாழ்கிறோம்.
அது போலவே நாமும் நமது அறம் தவாராமல் வாழ்ந்தால் உலகம் சிறக்கும்.

'அந்த அடிப்படையில் தான் அறத்தை நாம் காக்க, அறம் நம்மைக் காக்கும்' என்ற வேத மந்திரம் எழுந்தது.
தர்மமே அறம்; அறமே தர்மம்.

அந்த அறத்தின் பெயரால், திருப்பூரில் ஒத்த சிந்தையும், சமூகப் பார்வையும் கொண்ட நண்பர்கள் இணைத்து அமைத்துள்ள அமைப்பே 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்'.

அதன் இணைய ஊடகத் தளமாக இந்த வலைப்பூ திகழும்.

இந்த அமைப்பில் நீங்களும் சேருங்கள். நாம் இணைந்து  அறம் வளர்ப்போம்; அறம் காப்போம்! நம்மை நாமே காத்துக் கொள்வோம்!