வியாழன், 27 செப்டம்பர், 2012

அறம் வளர்ப்போம்!


அன்புள்ள நண்பர்களுக்கு,

அறம் - பாரத மண்ணில் பல பொருள் தரும் அற்புதமான ஒரு சொல்.

அறத்தால் வருவதே இன்பம் என்பார் திருவள்ளுவர்.
அறம் வளர்த்த நாயகி என்பது நாம் வழிபடும் இறைவியின் பெயர்.

அறம், பொருள் இன்பம், வீடு என்பதே வாழ்வின் லட்சியம் என்ற மகத்தான லட்சியம் வாழ்வு நம்மிடம் உண்டு.

அந்த அறம் தான் நம்மைக் காக்கிறது. இந்த உலகம் தனது அறம் தவறாமல் சுழல்வதால் தான் நாம் வாழ்கிறோம்.
அது போலவே நாமும் நமது அறம் தவாராமல் வாழ்ந்தால் உலகம் சிறக்கும்.

'அந்த அடிப்படையில் தான் அறத்தை நாம் காக்க, அறம் நம்மைக் காக்கும்' என்ற வேத மந்திரம் எழுந்தது.
தர்மமே அறம்; அறமே தர்மம்.

அந்த அறத்தின் பெயரால், திருப்பூரில் ஒத்த சிந்தையும், சமூகப் பார்வையும் கொண்ட நண்பர்கள் இணைத்து அமைத்துள்ள அமைப்பே 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்'.

அதன் இணைய ஊடகத் தளமாக இந்த வலைப்பூ திகழும்.

இந்த அமைப்பில் நீங்களும் சேருங்கள். நாம் இணைந்து  அறம் வளர்ப்போம்; அறம் காப்போம்! நம்மை நாமே காத்துக் கொள்வோம்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக