திங்கள், 30 செப்டம்பர், 2019

அறம் எழுத்தறிவித்தல் வாகன விளம்பரம்

இந்த விளம்பரம், ஃபிளக்ஸ் விளம்பரமாக அச்சிடப்பட்டு வாகனம் மூலமாக நகரில் உலா கொண்டுசெல்லப்பட்டு விளம்பரம் செய்யப்பட உள்ளது.

விளம்பர உதவி: விவேக் பர்னிச்சர், காங்கயம் சாலை, திருப்பூர்.


ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

அறம் எழுத்தறிவித்தல் விழா-2019 அறிவிப்பு


திருப்பூர் அறம் அறக்கட்டளையின் 
எட்டாம் ஆண்டு எழுத்தறிவித்தல் விழா
_____________________________________________

திருப்பூர் அறம் அறக்கட்டளை, எட்டாம் ஆண்டாக 'வித்யாரம்பம்' எனப்படும் எழுத்தறிவித்தல் விழாவை திருப்பூரில் இந்த ஆண்டும் விஜயதசமி நன்னாளில் நடத்துகிறது.

எழுத்தாளர்களைக் கொண்டே நமது குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பாரம்பரியச் சடங்கை தமிழகத்தில் மீட்டெடுக்க இந்த விழாவை அறம் அறக்கட்டளை நடத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சி முற்றிலும் இலவசம். தவிர, இந்நிகழ்வில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு ரூ. 160 மதிப்புள்ள சிலேட், பல்பம், வாய்பாடு, வண்ணப் படப் புத்தகம், கிரேயான்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இதுவரை எழுத்தாளர்கள் ஜெயமோகன், நாஞ்சில்நாடன், ஜோ டி குரூஸ், சாரு நிவேதிதா, சு.வேணுகோபால், சுப்ரபாரதிமணியன், சூத்திரதாரி கோபாலகிருஷ்ணன், ஈரோடு மோகனரங்கன், பெருமாள்முருகன், தேவதாஸ்,  தஞ்சை வெ.கோபாலன், பேரா. ம.வே.பசுபதி, அரவிந்தன் நீலகண்டன், ம.வெங்கடேசன், ஜடாயு, பி.ஆர்.ஹரன், சுனில்கிருஷ்ணன், பி.ஆர்.மகாதேவன், ஹரன் பிரசன்னா,  கோ.மகுடேஸ்வரன், இசை, மரபின்மைந்தன் முத்தையா, பேரா. கனகசபாபதி, பேரா.ஶ்ரீநிவாசன், தொல்லியல் அறிஞர் ராமசந்திரன், ஆதலையூர் சூரியகுமார் உள்ளிட்டோர் எழுத்தறிவித்தல் விழாவில் பங்கேற்று திருப்பூர்க் குழந்தைகளின் நாவில் ஓங்காரம் எழுதி, நெல்லில் அகரம் எழுதச்செய்து, வித்யாரம்பம் செய்வித்துள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 300 குழந்தைகள் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர்.

இந்த ஆண்டு எழுத்தறிவித்தலுக்கான ஆயத்தப் பணிகள் இன்று (நவராத்திரியின் முதல் நாள்) துவங்கி உள்ளன. திருப்பூர் ஶ்ரீ சக்தி இன்ஸ்டிட்யூஷன்ஸ் கல்வி நிறுவனம் அறத்துடன் இணைந்து இந்நிகழ்வில் பங்கேற்கிறது.

விழா விவரம்:

எழுத்தறிவித்தல் விழா 2019

நாள்: விஜயதசமி நன்னாள், 08.10.2019, செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 7.00 மணி - 11.00 மணி.
இடம்: அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில், திருப்பூர்.

இந்த ஆண்டு எழுத்தறிவிப்போர்:

1. ஶ்ரீ. திருப்பூர் கிருஷ்ணன், பத்திரிகையாளர், சென்னை.
2. ஶ்ரீ. க.பழனிசாமி, நல்லாசிரியர், திருப்பூர்.
3. ஶ்ரீ. ராம.கோபால்ரத்தினம், சமூக சேவகர், திருச்சி.
4. ஶ்ரீ. ஆரோக்கியசாமி, எழுத்தாளர், புதுக்கோட்டை.
5. ஶ்ரீ. தேவரராஜ், தேசிய கைப்பந்து வீரர், திருப்பூர்.
6. ஶ்ரீ. வீணா ஆர்.ராஜ்குமார், வீணை இசைக் கலைஞர், திருப்பூர்.
_________________________________________________________

முன்பதிவுக்கு:

கவிஞர் ஶ்ரீ.பக்தவத்சலம்- 94865 93100.
கொங்கு ராமகிருஷ்ணன் - 86752 50005