திருப்பூரில் இயங்கும் அறம் அறக்கட்டளை, தனக்கென சொந்தமாக ஒரு கட்டடத்தை எழுப்பி இன்று (26.08.2018) கிரஹப் பிரவேசம் செய்திருக்கிறது. நற்பணிகளுக்காகத் துவக்கப்பட்ட அறம் அறக்கட்டளையின் வரலாற்றில் இது ஒரு புதிய மைல்கல்.
தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சமூக விழிப்புணர்வுள்ள இளைஞர்களை உருவாக்குதல், கல்வித் துறையில் ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்படுத்துதல், தன்னலமற்ற சமூகப் பணி ஆகியவற்றை லட்சியமாகக் கொண்டு 2012-இல் அறம் அறக்கட்டளை திருப்பூரில் துவங்கப்பட்டது.