வியாழன், 2 அக்டோபர், 2014

எழுத்தறிவித்தல் விழா- தினமணி செய்தி


அறம் அறக்கட்டளை
சார்பில் நாளை
எழுத்தறிவித்தல் விழா


திருப்பூர், அக். 1: திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் வெள்ளிக்கிழமை (அக். 3 - நாளை) திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் எழுத்தறிவித்தல் விழா நடைபெறவுள்ளது.

விஜயதசமியன்று எழுத்தறிவித்தலுடன் குழந்தைகளுக்கு கல்வியைத் துவங்குவது நமது மரபு. திருப்பூர் அறம் அறக்கட்டளை எழுத்தாளர்களைக் கொண்டு வித்யாரம்பம் நிகழ்ச்சியை கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூரில் நடத்தி வருகிறது.

மூன்றாவது ஆண்டாக இம்முறை திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் எழுத்தறிவித்தல் விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் கல்வெட்டு ஆய்வாளர் ராமசந்திரன், எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், சூத்திரதாரி கோபாலகிருஷ்ணன், கவிஞர் மோகனரங்கன் உள்ளிட்டோர் பங்கேற்று குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ளதாக, அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

ரத்தம் வேண்டாம், வியர்வை சிந்தி உழைப்போம்!


-சாஸ்த்ரா பல்கலை. பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன்

.

தினமணி (கோவை)- 1708.2014- திருப்பூர் பக்கம் 3

திருப்பூர், ஆக. 16: நாட்டை முன்னேற்ற இளைஞர்கள் ரத்தம் சிந்த வேண்டாம்; வியர்வை சிந்தி உழைத்தால் போதும் என்று, திருப்பூரில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன் பேசினார்.

திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் வியாழன், வெள்ளிக்கிழமை இருதினங்களும் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் நிறைவு விழாவில் சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன் பேசியது:

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் பிறந்த தேதி உண்டு. ஆனால், இந்தியா பிறந்த தேதி கூற முடியாத அளவுக்கு பழமை வாய்ந்த, அறுபடாத வரலாறு கொண்ட  நாடாகும். எந்த நாட்டிற்கு பிறந்த தேதி இல்லையோ, அந்த நாட்டிற்கு மறைவுத் தேதியும் இருக்க முடியாது. இந்தியா அமரத்துவம் வாய்ந்த நாடு.

முதலில் அன்னியப் பொருள்களுக்கும், இரண்டாவதாக அன்னிய ஆட்சிக்கும் அடிமைப்பட்ட நாம், தற்போது சுதந்திரம் பெற்றபோதும் அன்னியக் கருத்துகளுக்கு அடிமையாக உள்ளோம். இந்நிலை மாற வேண்டும். நமது பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து சமநிலையில் சிந்தித்தால் தான் நாடு முன்னேற முடியும்.

சுதந்திரத்தை ரத்தம் சிந்தாமல் நாம் அடையவில்லை. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை,  'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது' என்று பாடியது, உப்பு சத்தியாக்கிரஹத்திற்காக மட்டுமே. பல்லாயிரம் பேர் தங்கள் ரத்தம் சிந்திப் பாடுபட்டுப் பெற்ற சுதந்திரத்தையே நாம் அனுபவிக்கிறோம்.

நாம், நாட்டை முன்னேற்ற ரத்தம் சிந்த வேண்டியதில்லை. வியர்வை சிந்தி உழைத்தால் போதும், உலக அரங்கில் இந்தியா தலைமைப் பீடம் ஏற்கும் என்றார்.

இவ்விழாவில், சட்டப் பஞ்சாயத்து அமைப்பின் நிறுவனரும் பொதுச்செயலாளருமான செந்தில் ஆறுமுகத்திற்கு  ‘அறச்செம்மல் விருது' வழங்கப்பட்டது. அவர் சார்பில் இவ்விருதை அந்த அமைப்பின் மாணவரணி செயலாளர் கோபிகா பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவுக்கு கல்வெட்டியல் அறிஞர் ராமசந்திரன் தலைமை வகித்தார். அறம் அறக்கட்டளைத் தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம், ஸ்ரீபுரம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறம் அறக்கட்டளை நிர்வாகிகள் சத்தியநாராயணன், சிவகுமார், பாலசுப்பிரமணியம், சுரேஷ்பாபு, ஆடிட்டர் ஸ்ரீனிவாசன், ராஜமாணிக்கம், ஹரிபிரசாத் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

-நன்றி: தினமணி (17.08.2014) - கோவை

படவிளக்கம்:
திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பேசுகிறார் சாஸ்த்ரா பல்கலைக்கழக பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன். உடன், கல்வெட்டியல் அறிஞர் ராமசந்திரன், ஸ்ரீபுரம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.விஜயகுமார், அறம் அறக்கட்டளைத் தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம், சட்டப் பஞ்சாயத்து  அமைப்பின் மாணவரணி செயலாளர் கோபிகா ஆகியோர். 
.







இளம் தலைமுறையினர் வியாபாரத்தில் ஈடுபட வேண்டும்

-வெற்றி விடியல் ஸ்ரீநிவாசன்





திருப்பூர், ஆக. 15: நாடு சுபிட்சம் பெற இளைய தலைமுறையினர் தொழில் முனைவோர்களாக வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்று வெற்றி விடியல் ஸ்ரீநிவாசன் பேசினார்.

திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் வியாழன், வெள்ளி இருதினங்கள் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் சுதந்திர தின விழா கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சுதந்திர தினத்தன்று காலை 8 மணியளவில் தேசியக் கொடியேற்றப்பட்டது. வாசவி வித்யாலயா நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியரின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஸ்ரீபுரம் அறக்கட்டளை தலைவர் சண்முகம், அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் சி.சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் ராஜா சண்முகம் பேசியது: திருப்பூர் தொழில் முனைவோரை உருவாக்கும் நகரமாக உள்ளது. பின்னலாடைத் தொழிலின் தலைநகரமாக விளங்குகிறது. இதற்கு தொழில்முனைவோரின் ஆக்க சக்திதான் காரணம்.

அதே சமயம் பின்னலாடைத் தொழிலில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இடையில் உறவுத் தன்மையுடனும், கூட்டு முயற்சியுடனும் செயல்பட்டு வருகின்றன. சிறு முதலீட்டில் கூட திருப்பூரில் தொழில் செய்து அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற முடியும்.

திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் உள்நாட்டு வர்த்தகத்தை ரூ. 25,000 கோடி மதிப்பில் இருந்து ரூ. 1,00,000 கோடி மதிப்புக்கு கொண்டு செல்வதற்கான இலக்கை எட்டுவதற்கு 2020 திருப்பூர் விஷன் திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஸ்ரீபுரம் அறக்கட்டளை, சி.ஐ.ஐ. அமைப்பு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

இதில், எழுத்தாளரான தொழில் ஆலோசகர் வெற்றி விடியல் ஸ்ரீநிவாசன் பேசியது:

தொழில்முனைவோருக்கான களத்தை ஏற்படுத்தித் தரும் நகரமாக திருப்பூர் விளங்குகிறது. உலகளவில் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் செய்யும் அனுபவமிக்க திருப்பூர் தொழிலதிபர்கள், உலக நாடுகளுக்கு தேவைப்படும் பிற பொருள்களை வர்த்தகம் செய்வதற்கும் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்ட வேண்டும். ஊக்கத்துடன் தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும் என்றார்.

நன்றி: தினமணி- கோவை (16.08.2014) திருப்பூர் பக்கம்: 2
 

படவிளக்கம்:
திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், திரைகடலோடியும் என்ற தலைப்பில் கருத்துரையாற்றுகிறார் தொழில் ஆலோசகர் வெற்றி விடியல் ஸ்ரீநிவாசன். உடன் இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் ராஜா சண்முகம், ஸ்ரீபுரம் அறக்கட்டளை தலைவர் சண்முகம், அறம் அறக்கட்டளைத் தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியம். 

Click and Enlarge to read...
 .

தொல்லியல் கருத்தரங்கம்- தினமணி படம்




அறம் அறக்கட்டளையின் சுதந்திர தினத் திருவிழாவின் முதல்நாள் நடைபெற்ர தொல்லியல் கருத்தரங்கம் குறித்து தினமணியில் (கோவை- 15.08.2014, திருப்பூர் பக்கம்: 4) வெளியான படச்செய்தி...

Click and Enlarge to read


திங்கள், 11 ஆகஸ்ட், 2014

சுதந்திர தினத் திருவிழா- பத்திரிகை செய்தி

திருப்பூரில் 11.08.2014 அன்று, அடையாறு ஆனந்தபவன் ஓட்டலில் அறம் அறக்கட்டளை நடத்திய பத்த்ரிகையாளர் சந்திப்பில் விநியோகிக்கப்பட்ட பத்திரிகை செய்தி...

 பத்திரிகை செய்தி

அறம் அறக்கட்டளை மூன்றாம் ஆண்டாக நடத்தும் சுதந்திர தினத் திருவிழா, திருப்பூர், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில், வரும் ஆகஸ்ட் 14, 15 தேதிகளில் (வியாழன், வெள்ளி) நடைபெறுகிறது.

தொல்லியல் கருத்தரங்கம்:

சுதந்திர தினத் திருவிழாவின் முதல்நாள் நிகழ்வாக, 14.08.2014, வியாழக்கிழமை, மாலை 5.00 மணியளவில், தொல்லியல், கல்வெட்டியல், மெய்யியல் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் சிற்ப்பு விருந்தினர்களாக, திருப்பூர், வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர் வே.நாகராஜ் கணேஷ்குமார், மொண்டிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ச.மு.ரமேஷ்குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டு, தொல்லியல் துறையின் மேனாள் தலைவர் புலவர் செ.இராசு, ‘அகழாய்வில் கொங்கு வரலாறு’ என்ற தலைப்பில் பேசுகிறார்.

சென்னை, தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவன நிர்வாகி எஸ்.ராமச்சந்திரன், ‘கொங்கு மண்டல கல்வெட்டுகள் காட்டும் சமூக அமைப்பு’ என்ற தலைப்பில் பேசுகிறார்.

கன்னியாகுமரி, விவேகான்ன்ந்த கேந்திரத்தின் ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன், ‘தமிழர் மெய்யியலும் நவீன அறிவியலும்; என்ர தலைப்பில் பேசுகிறார்.

தொழில்முனைவோர் கருத்தரங்கம்:

மறுநாள், 15.08.2014, வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் தேசியக் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து காலை 10.00 மணியளவில், திருப்பூர், வாசவி வித்யாலயம் நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகளின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

காலை 10.30 மணியளவில் துவங்கும் தொழில் முனைவோர் கருத்தரங்கம், இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் பிரிவின் தலைவர் ராஜா.எம்.சண்முகம், திருப்பூர் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சக்தி எம்.சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.

இதில், சென்னையைச் சேர்ந்த எழுத்தாளரும் தொழில் ஆலோசகருமான வெற்றி விடியல் ஸ்ரீநிவாசன் ‘திரைகடலோடியும்...’ என்ற தலைப்பில் பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தொழிலதிபர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

களப்பணியாளர்கள் அறிமுகம்:

சமுதாயப்பணிகளில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் ஆரவாரமின்றி உழைக்கும் இளம் தலைமுறையினரை அறிமுகப்படுத்தும் விதமாக, ஆகஸ்ட் 15, மதியம் 2.00 மணியளவில் களப்பணியாளர்கள் அறிமுகம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதில் விவேகானந்த கேந்திரா ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன், சென்னையைச் சேர்ந்த சிற்பக்கலை ஆர்வலர் ஜி.சசிதரன், சென்னை ரீச் ஃபவுண்டேஷன் நிர்வாகி ஓகை நடராஜன் ஆகியோர் தங்கள் துறை சார்ந்த அனுபவங்களை முன்வைக்கின்றனர்.

இந்நிகழ்வின் இடையே, பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் அருள்புரம்- ஜெயெந்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, விஜயாபுரம்- பாரதி வித்யாபவன் சிபிஎஸ்இ பள்ளி, காங்கயம்-  விவேகானந்த அகாடமி சிபிஎஸ்இ பள்ளி, ஆஷர் நகர் – வித்யாமந்திர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர்.

அறச்செம்மல் விருது:

சமூகத்திற்காக அர்ப்பண மனோபாவத்துடன் அரும்பணியாற்றும் சமூக சேவகர்களுக்கு ‘அறச்செம்மல்’ விருதினை கடந்த ஆண்டு முதல் அறம் அறக்கட்டளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான அறச்செம்மல் விருது, சென்னையில் இயங்கும் ‘சட்டப் பஞ்சாயத்து’ இயக்கத்தின் நிறுவனரும் பொதுச்செயலாளருமான செந்தில் ஆறுமுகம் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்வுக்கு, திருப்பூர்- மேகலா குழும நிறுவனங்களின் தலைவர் மேகலா சி.சுப்பிரமணியம், சண்முகானந்த சங்கீத சபாவின் தலைவர் வழக்குரைஞர் வி.வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விருதினை எழுத்தாளர் ஜோ டி குரூஸ் வழங்குகிறார்.

சுதந்திர தினப் பேருரை:

அறம் அறக்கட்டளையின் சுதந்திர தின விழாவில் தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களே நிறைவுரையாற்றி வருகின்றனர். இந்த ஆண்டு சுதந்திர தினப் பேருரையாற்றுகிறார், 2013அம் ஆண்டுக்கான சாஹித்ய அகாடமி விருது பெற்றவரும்,  ‘கொற்கை’,  ‘ஆழிசூழ் உலகு’ புதினங்களின் ஆசிரியருமான எழுத்தாளர் ஜோ டி குரூஸ்.

திருப்பூர், ஸ்ரீபுரம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.விஜயகுமார் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இவ்விழாவில் பங்கேற்குமாறு அனைவரையும் அழைக்கிறோம்.

தொடர்புக்கு:

திரு. ஆடிட்டர். ச.சிவசுப்பிரமணியன் – 94437 04858
திரு. சு.சத்தியநாராயணன் – 98940 31101
திரு. கு.சிவகுமார் – 98949 33877
திரு. பாலசுப்பிரமணியம் – 99444 04499.

தினமணியில் வெளியான செய்தியின் நறுக்கு:




 

அறம் சிந்தனை முத்துக்கள்

அறம் அறக்கட்டளை நடத்திய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அறிஞர் பெருமக்களின் கருத்துக்களின் சிறுதுளி....

படத்தின் மீது சொடுக்கினால் பெரிதாக்கிப் படிக்கலாம்!

பிரசுரத்தின் முன்பக்கம்
 
பிரசுரத்தின் உள்பக்கம்
.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

சுதந்திரதின திருவிழா- 2014 அழைப்பிதழ்

அறம் அறக்கட்டளை நடத்தும் 

சுதந்திரதினத் திருவிழா- 2014

அழைப்பிதழின் மின்வடிவம்

(படங்களின் கீது சொடுக்கினால் பெரிதாக்கிப் படிக்கலாம்)


அழைப்பிதழின் வெளிப்புறம்

அழைப்பிதழின் உள்புறம்





அழைப்பிதழின் முதல் பக்கம்

அழைப்பிதழின் இரண்டாம் பக்கம்
அழைப்பிதழின் மூன்றாம் பக்கம்
அழைப்பிதழின் நான்காம் பக்கம்

சுதந்திர தின விழா- 2014 நிகழ்ச்சி நிரல்





அறம் அறக்கட்டளை, திருப்பூர்
நடத்தும்
சுதந்திர தினத் திருவிழா- 2014
14.08.2014 வியாழக்கிழமை
15.08.2014  வெள்ளிகிழமை
இடம்: ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம்,
யுனிவர்சல்  திரையரங்கம்  சாலை,  திருப்பூர்.

***
முதல் நாள் நிகழ்வு

14.08.2014, வியாழக்கிழமை, மாலை 4.00 மணி.
தொல்லியல், கல்வெட்டியல், மெய்யியல் கருத்தரங்கம்
சிறப்பு விருந்தினர்கள்:
திரு.வே.நாகராஜ் கணேஷ்குமார்.
செயலாளர், வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம், திருப்பூர்.

திரு. ச.மு.ரமேஷ்குமார்
தலைமை ஆசிரியர் 
 .ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மொண்டிபாளையம்.

1. அகழ்வாய்வில் கொங்கு வரலாறு
கருத்துரை: புலவர் திரு. செ.இராசு,
மேனாள் தலைவர், கல்வெட்டு, தொல்லியல் துறை, தமிழ் பல்கலைக்கழகம், ஈரோடு

2. கொங்கு மண்டல கல்வெட்டுகள் காட்டும் சமூக அமைப்பு
கருத்துரை: திரு. எஸ். இராமச்சந்திரன்,
தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை

3. தமிழர் மெய்யியலும் நவீன அறிவியலும்
கருத்துரை: திரு. அரவிந்தன் நீலகண்டன்,
ஆராய்ச்சியாளர், விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி.

***
இரண்டாம் நாள் நிகழ்வு

15.08.2014  வெள்ளிக்கிழமை
சுதந்திர தின நிகழ்ச்சிகள்

காலை 7.00 மணி :  தேசியக் கொடியேற்றம்
காலை 10.00 மணி:  மாணவ மாணவியரின் வில்லுப்பாட்டு
               வாசவி வித்யாலயம் நடுநிலைப் பள்ளி, திருப்பூர்
***
காலை 10.30 மணி:  
தொழில் முனைவோர் கருத்தரங்கம்
சிறப்பு விருந்தினர்கள்:
திரு. ராஜா M. சண்முகம்,
தலைவர், இந்திய தொழில் கூட்டமைப்பு, திருப்பூர்.

திரு. சக்தி M. சுப்பிரமணியம்,
தலைவர், திரையரங்கு உரிமையாளர் சங்கம், திருப்பூர்.

      பொருள்: திரைகடலோடியும்...
கருத்துரை: திரு. வெற்றி விடியல் ஸ்ரீநிவாசன், B.Com, ACA
எழுத்தாளர், தொழில் ஆலோசகர், சென்னை.

***
 மதியம் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

கலைநிகழ்வுகளும் களப்பணியாளர் அறிமுகமும்


அறிமுகமாகும் களப்பணியாளர்கள்:

திரு. அரவிந்தன் நீலகண்டன்,
விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி

திரு. G.சசிதரன்,
சமூக ஆர்வலர், சென்னை

திரு. ஓகை நடராஜன்,
ரீச் பவுண்டேஷன், சென்னை

கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பள்ளிகள்:

ஜெயந்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, அருள்புரம்
பாரதி வித்யாபவன் சிபிஎஸ்இ பள்ளி, விஜயாபுரம்
விவேகானந்தா அகாடமி சிபிஎஸ்இ பள்ளி, காங்கயம்
வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆஷர் நகர்

***
மாலை 6.00 மணி: விருது வழங்கும் நிகழ்வு

சிறப்பு விருந்தினர்கள்:
திரு. C. மேகலா சுப்பிரமணியம்
தலைவர், மேகலா குழும நிறுவனங்கள், திருப்பூர்.

திரு. V.வீரராகவன்,
தலைவர், சண்முகானந்த சங்கீத சபா, திருப்பூர்.


2014-ஆம் ஆண்டுக்கான அறச்செம்மல் விருது

பெறுபவர்: திரு. செந்தில் ஆறுமுகம்,

நிறுவனர், பொதுச்செயலாளர்,
சட்டப் பஞ்சாயத்து இயக்கம், சென்னை.

***
இரவு 7.00 மணி- சுதந்திர தினப் பேருரை

சிறப்பு விருந்தினர்:
திரு. T.R.விஜயகுமார்
செயலாளர், ஸ்ரீபுரம் அறக்கட்டளை, திருப்பூர்

சிறப்புரை: திரு. ஜோ.டி.குரூஸ்

எழுத்தாளர், 2013 சாஹித்ய அகாடமி விருதாளர், உவரி.

 ***
வாருங்கள் சுதந்திரத்தைக் கொண்டாடுவோம்!
 வாருங்கள் திருப்பூரை மேம்படுத்துவோம்!

-0-

தொடர்பு முகவரி:
அறம் அறக்கட்டளை, திருப்பூர்.
(பதிவு எண்: 1432/2012)

36/24 - பின்னி காம்பவுண்ட் மெயின் ரோடு,  
குமரன் சாலை, திருப்பூர் – 641601,
அலைபேசி:  94437 04858, 98940 31101, 98949 33877
 மின்னஞ்சல்:aramtirupur@gmail.com  
வலைப்பூ: http://aramtirupur.blogspot.in 
முகநூல்: http://www.facebook.com/idcc.tirupur