திங்கள், 25 செப்டம்பர், 2017

வித்யாரம்பம் -2017 அழைப்பிதழ்

 ஆறாம் ஆண்டாக அறம் அறக்கட்டளை நடத்தும் எழுத்தறிவித்தல் விழாவின் விளம்பரங்கள்:

சுவரொட்டி- 200 எண்ணிக்கை

பேனர் 2 X 3 - 8 எண்ணிக்கை

சிறிய பிளெக்ஸ் பேனர் 2 X 3 - 8 எண்ணிக்கை

பெரிய பிளெக்ஸ் பேனர் 10  X 8 -  2 எண்ணிக்கை

வித்யாரம்பம் 2017 விழா அழைப்பிதழ்


அறம் அறக்கட்டளை, திருப்பூர்
நடத்தும்
ஆறாம் ஆண்டு எழுத்தவித்தல் விழா- 2017


 நாள்: விஜயதசமி நன்னாள் (30.09.2017) சனிக்கிழமை
நேரம்: காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை
இடம்: அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருகோயில், திருப்பூர்.
திருப்பூரில் நலப்பணிகளை மேற்கொள்ள 2012-இல் நிறுவப்பட்டது அறம் அறக்கட்டளை  (பதிவு எண்: 1432/ 2012).  ‘அறத்தை நாம் காக்க அறம் நம்மைக் காக்கும் என்பதே எமது தாரக மந்திரம்.
தேசிய விழிப்புணர்வுப் பணிகளிலும் கல்விப் பணிகளிலும் ஈடுபட்டுவரும் அறம் அறக்கட்டளை, 2012 முதல் திருப்பூர் அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருகோயிலில் விஜயதசமி நன்னாளில் வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
விஜயதசமி நாளில் துவங்கும் எந்தச் செயலும் மாபெரும் வெற்றி பெறும் என்பது நமது நம்பிக்கை. எனவேதான் அந்நாளில் நமது குழந்தைகளுக்கு கல்விப் பயிற்சியின் துவக்கமான எழுத்தறிவித்தலை நடத்துகிறோம்.  ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்என்ற பழமொழி, நமது சமுதாயம் கல்விக்கு அளித்த மதிப்பை வெளிப்படுத்துகிறது.
அதிலும் குறிப்பாக, சரஸ்வதி கடாட்சம் பெற்ற எழுத்தாளர்கள், ஆசிரியர்களைக் கொண்டே எழுத்தறிவித்தல் நடத்தும் நமது பண்டைய பாரம்பரியத்தை மீட்டுருவாக்கும் வகையில், திருப்பூரில் அறம் அறக்கட்டளை நடத்தும் எழுத்தறிவிதல் விழாக்களில் எழுத்தாளர்களே தங்கள் பொற்கரங்களால் நமது குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கின்றனர்.

இதுவரை இந்நிகழ்வில், எழுத்தாளர்கள் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன், பேராசிரியர் ப.கனகசபாபதி, நடராஜ குருக்கள் (2012), ஜோ.டி.குரூஸ்,   பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன், ஜடாயு.வெங்கடேசன்சரஸ்வதி  (2013), பெருமாள் முருகன், கல்வெட்டு ஆய்வாளர் ராமச்சந்திரன், சூத்திரதாரி கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன் (2014), சா.தேவதாஸ்,  சுப்ரபாரதி மணியன், .வேணுகோபால், கவிஞர் இசை (2015), நாஞ்சில்நாடன்.வே.பசுபதிதஞ்சை வெ.கோபாலன், பி.ஆர்.மகாதேவன் (2016) ஆகியோர் பங்கேற்று நமது குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைத்துள்ளனர்.

இந்த ஆண்டு விஜயதசமியன்று (30.09.2017) நடைபெறும் எழுத்தறிவிதல் விழாவில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, மருத்துவர் இரா.சுநீல்கிருஷ்ணன், பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன், கவிஞர் கோ.மகுடேஸ்வரன், நல்லாசிரியர் எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு,  நெல்லில் அகரமும், குழந்தைகளின் நாவில் ஓங்காரமும் எழுதி, நமது குழந்தைகளின் கல்விப் பயணத்தை இனிதே துவக்கிவைத்து ஆசீர்வதிக்கின்றனர்.

இறைருளும் குருவருளும் துணைகொண்டு நமது குழந்தைகள் கல்வியில் உயர்ந்து, நாட்டின் சிறந்த குடிமக்களாக வேண்டும். இதுவே அறம் அறக்கட்டளையின் நோக்கம்; பிரார்த்தனை.


இந்த ஆண்டு எழுத்தறிவிக்கும் ஆசான்கள்:

எழுத்தாளர் சாரு நிவேதிதா 

தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க இயலாத ஒரு குரல் சாரு நிவேதிதா (64). நாகப்பட்டினம் சொந்த ஊர்; சென்னையில் வசிக்கிறார். அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன. புதிய எக்ஸைல், ஸீரோ டிகிரி, ராஸ லீலா உள்ளிட்ட 6 புதினங்களும்,  கோணல் பக்கங்கள், தப்புத் தாளங்கள், மனம்கொத்திப் பறவை, வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் உள்ளிட்ட 30 கட்டுரைத் தொகுப்புகளும் இவரது படைப்புகள். புனைவல்லாத இலக்கியம், கட்டுரைகள் , ிரைப்பட விமர்சனம் ஆகியவற்றில் மிகவும் சிறப்புடன் செயல்படுபவர்.

மருத்துவர் இரா.சுநீல்கிருஷ்ணன்

ஆயுர்வேத மருத்துவரான சுநீல்கிருஷ்ணன் (31), காரைக்குடியில் வசிக்கிறார். மகாத்மா காந்தி மீது அளவற்ற பற்றுடையவர். அதற்காகவே காந்தியம் குறித்த படைப்புகளின் களஞ்சியமாக ‘காந்தி இன்றுஎன்ற இணையதளத்தை (www.gandhitoday.inதனியொருவராக நடத்தி வருகிறார். காந்தி- எல்லைகளுக்கு அப்பால் என்ற இவரது நூலை சொல்புதிது பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ராஜ்மோகன் காந்தியின் நூல், க்‌ஷித்தி மோகனின் ஹிந்துத்தவ்ம் என்ற நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன்

பத்திரிகையாளரான பி.ஆர்.ஹரன் (), சென்னையில் வசிக்கிறார். 20 ஆண்டுகள் விற்பனைப் பிரதிநிதியாக இருந்தவர், 2004 முதல் ஊடகங்களில் பணிபுரிகிறார். ஹிந்து மித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியர், அகில இந்திய வானொலியின் பகுதி நேர ஒருங்கிணைப்பாளர், இணைய எழுத்தாளர், ஹைந்தவ கேரளம், ஆர்கனைசர், நியூஸ் டுடே பத்திரிகைகளில் பத்தி எழுத்தாள்ர், திண்ணை, விஜயவாணி, தமிழ்ஹிந்து, பாரத பாரதி உள்ளிட்ட இனைய இதழ்களில் எழுதி வருகிறார். இவரது இரு நூல்கள் தற்போது அச்சில் உள்ளன. திருக்கோயில் பக்தர் சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார்.

கவிஞர் கோ.மகுடேஸ்வரன்

திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி ஆலோசகராகப் பணி புரியும் கோ.மகுடேஸ்வரன் (42), நல்லூரில் வசிக்கிறார். கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், இலக்கண அறிஞர், மொழி ஆய்வாளர், குறள் உரைஞர், திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா எனப் பன்முக ஆளுமை உடையவர். பூக்கள் பற்றிய தகவல்கள், அண்மை, யாரோ ஒருத்தியின் நடனம், காமக்கடும்புனல்,  குமரன் காவியம், காந்தி அண்ணல்புலிப்பறழ், பாட்டுத்திறம், தன்வெறியாடல், விலைகள் தாழ்வதில்லை, திருக்குறள் உரை உளீட்ட பல நூல்களை எழுதியுள்ளார். தினமலர்- பாடம், பக்தி விகடன், தி இந்து உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.

நல்லாசிரியர் எஸ்.பாலகிருஷ்ணன்
திருப்பூர், தேவாங்கபுரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 40 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் எஸ்.பாலகிருஷ்ணன் (). திருப்பூர் ஓம்சக்தி கோயில் அருகே வசிக்கிறார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருதை 1984-இல் பெற்றார். மூன்று தலைமுறை மாணவர்களை சிறந்த தரத்துடன் உருவாக்கியவர்.
தொடர்புக்கு:

ஸ்ரீ.பக்தவத்சலம்-  98422 27505
கு.சிவகுமார்- 98949 33877