வியாழன், 26 அக்டோபர், 2023

அறம் சிந்தனை வட்டம் - நூல்கள் வெளியீட்டு விழா - தினமலர் செய்தி

 


அறம் வித்யாரம்பம்-2023 பத்திரிகைச் செய்திகள்

 அறம் அறக்கட்டளையின் பத்தாம் ஆண்டு எழுத்தறிவித்தல் விழா குறித்த பத்திரிகை செய்திகள் இங்கே...




தினமணி (25.10.2023)

செவ்வாய், 24 அக்டோபர், 2023

அறம் எழுத்தறிவித்தல் விழா- 2023 நிகழ்வின் பதிவு

 


 திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி (எழுத்தறிவித்தல்) 24.10.2023, விஜயதசமி அன்று அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோயிலில் சிறப்புடன் நடைபெற்றது.

திருப்பூர், அறம் அறக்கட்டளை சார்பாக, ஒவ்வோர் ஆண்டும் திருப்பூர் மாநகரிலுள்ள அருள்மிகு விசாலாட்சியம்மன் சமேத ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோயிலில்  வித்யாரம்பம் எனும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்கல்வியைத் தொடங்கும் இந்நிகழ்வானது, திருக்கோயில்கள் மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் ஒவ்வோராண்டும் விஜயதசமி திருநாளன்று நடைபெறுகிறது.

தலைவாழை இலை அல்லது தாம்பூலத் தட்டில் நெல்மணிகளைப் பரப்பி, சமுதாயத்தில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்கள், நல்லாசிரியர்கள், கலைத்துறை மற்றும் இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்கள், இலக்கியவாதிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலரால் மழலைகளின் கைவிரல் பிடித்து, அகரம் எழுதி, தங்கவேல் அல்லது தர்ப்பையை தேனில் தொட்டு, குழந்தைகளின் நாவில் ஓம்காரம் எழுதி, மஞ்சள் கலந்த அரிசி அட்சதையைத் தூவி கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்துவார்கள்.

தொன்றுதொட்டு பாரம்பரியமாக நடைபெற்றுவரும் இந்நிகழ்ச்சியானது, திருப்பூர் அறம் அறக்கட்டளையின் சார்பாக 10-வது ஆண்டாக 24.10.2023  செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் திரு.சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பிரபல கட்டுரையாளரும், எழுத்தாளருமான திரு. பி.பிரபாகரன், வேத அறிஞரும், கண் மருத்துவருமான டாக்டர் திரு.எம்.எல்.ராஜா, வித்யாபாரதி அமைப்பின் சங்கீதத் துறை பொறுப்பாளர் திருமதி. வித்யா ரமேஷ், மேடைப் பேச்சாளரும், கிராம நிர்வாக அலுவலருமான திரு. ஜெ.சுந்தரபாண்டியன், திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளரும், கவிஞருமான திரு. சு.சிவதாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு எழுத்தறிவித்து ஆசிர்வதித்தனர். 230-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நடைபெற்றது.

குழந்தைகள், பெற்றோர் என அனைவருக்கும் கல்கண்டுசாத பிரசாதமும், எழுது பலகை, எழுதுகோல், அரிச்சுவடி, ஓவியப் புத்தகம், கலர் கிரேயான்கன் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய  பெட்டகத் தொகுப்பும் இலவசமாக வழங்கப்பட்ட.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூர் அறம் அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

 

(பத்திரிகைகளுக்கு அனுப்பிய அறிக்கை)

.

வித்யாரம்பம்- தினமலர் முன்செய்திகள்

அறம்- வித்யாரம்பம் தொடர்பாக தினமலர் நாளிதழின் திருப்பூர் பதிப்பில் வெளியான முன்செய்திகளின் பதிவுகள் இங்கே...


தினமலர் (23.10.2023)


.


தினமலர் (24.10.203)


சனி, 21 அக்டோபர், 2023

எழுத்தறிவித்தல் விழா-2003- விருந்தினர்கள் - வீடியோ

 




  • வடிவமைப்பு: கவிஞர் ஸ்ரீ. பக்தவத்சலம்

.

எழுத்தறிவித்தல் விழா- 2023 மேடை விளம்பரம்

 



நன்றி: 

நிகழ்ச்சியின் கோ-ஸ்பான்சரான, 

விவேகானந்தா அகாடமி பள்ளி, காடையூர், காங்கயம்.



.

வெள்ளி, 20 அக்டோபர், 2023

எழுத்தறிவித்தல் விழா -2023 விளம்பர பேனர்கள்

அறம் அறக்கட்டளையின் வித்யாரம்பம்-2023 நிகழ்வுக்காக 

இந்த ஆண்டு, சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தின் ஸ்பான்சரில்

 கீழ்க்கண்ட  ஃபிளெக்ஸ் விளம்பரங்கள் 

6 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. 

(அளவு: 8  X  6 )


திருப்பூர், விஸ்வேஸ்வரர் திருக்கோயில்


திருப்பூர், வீரராகவப்பெருமாள் திருக்கோயில்


திருப்பூர், கோட்டை மாரியம்மன் திருக்கோயில்



திருப்பூர் டவுன்ஹால்


திருப்பூர்



திருப்பூர்



விளம்பர உதவிக்கு ஏற்பாடு செய்த சகோதரர், சுதா விளம்பர நிறுவன உரிமையாளர் திரு. முத்துசாமி அவர்களுக்கு நன்றி.

.



வியாழன், 19 அக்டோபர், 2023

எழுத்தறிவித்தல் விழா- 2023 - நிகழ்ச்சி நிரல்

 



எழுத்தறிவித்தல் விழா 2023

நாள்: விஜயதசமி நன்னாள், 24.10.2023, செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 9.00 மணி - 12.00 மணி.
இடம்: அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்பூர்.

இந்த ஆண்டு எழுத்தறிவிப்போர்:

1. ஶ்ரீ. பி.பிரபாகரன், எழுத்தாளர், சென்னை

2. ஸ்ரீ. டாக்டர் எம்.எல்.ராஜா,  மருத்துவர், ஈரோடு

3. ஶ்ரீ. ஜெ.சுந்தரபாண்டியன், மேடைப் பேச்சாளர், திருப்பூர்

4. ஶ்ரீமதி.  வித்யா ரமேஷ், இசை ஆசிரியை, திருப்பூர்

5. ஶ்ரீ. கவிஞர் சு.சிவதாசன், திருப்பூர்


முன்பதிவுக்கு:

  • கவிஞர் ஶ்ரீ.பக்தவத்சலம்- 98422 27505
  • கு.சிவகுமார்- 98949 33877

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

எழுத்தறிவித்தல் விழா- 2023 அறிவிப்பு

 


திருப்பூர் அறம் அறக்கட்டளை,  பத்தாம் ஆண்டாக 'வித்யாரம்பம்' எனப்படும் எழுத்தறிவித்தல் விழாவை திருப்பூரில் இந்த ஆண்டும் விஜயதசமி நன்னாளில் நடத்துகிறது. 

எழுத்தாளர்களைக் கொண்டே நமது குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பாரம்பரியச் சடங்கை தமிழகத்தில் மீட்டெடுக்க இந்த விழாவை அறம் அறக்கட்டளை நடத்தி வருகிறது. 

இந்த நிகழ்ச்சி முற்றிலும் இலவசம். தவிர, இந்நிகழ்வில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு ரூ. 200  மதிப்புள்ள சிலேட், பல்பம், வாய்பாடு, வண்ணப் படப் புத்தகம், கிரேயான்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 

2012ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்வு 2019 வரை தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது. 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்றுக் கால தடை காரணமாக, இவ்விழாவை நடத்த முடியவில்லை. 2022ஆம் ஆண்டு எழுத்தறிவித்தல் விழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த ஆண்டும் (2023) இவ்விழா சிறப்பாக நடைபெற உள்ளது. 

இதுவரை எழுத்தாளர்கள் ஜெயமோகன், நாஞ்சில்நாடன், ஜோ.டி.குரூஸ்,  சு.வேணுகோபால், சுப்ரபாரதிமணியன், சூத்திரதாரி கோபாலகிருஷ்ணன், ஈரோடு மோகனரங்கன், பெருமாள்முருகன், தேவதாஸ்,  தஞ்சை வெ.கோபாலன், பேரா. ம.வே.பசுபதி, அரவிந்தன் நீலகண்டன், ம.வெங்கடேசன், ஜடாயு, பி.ஆர்.ஹரன், சுனில்கிருஷ்ணன், பி.ஆர்.மகாதேவன், ஹரன் பிரசன்னா,  கோ.மகுடேஸ்வரன், இசை, மரபின்மைந்தன் முத்தையா, பேரா. கனகசபாபதி, பேரா. இரா. ஶ்ரீநிவாசன், தொல்லியல் அறிஞர் ராமசந்திரன், திருப்பூர் கிருஷ்ணன், ராம.கோபால்ரத்தினம், கோவை ஓவியர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் எழுத்தறிவித்தல் விழாவில் பங்கேற்று திருப்பூர்க் குழந்தைகளின் நாவில் ஓங்காரம் எழுதி, நெல்லில் அகரம் எழுதச்செய்து, வித்யாரம்பம் செய்வித்துள்ளனர். 

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 300 குழந்தைகள் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர். இந்த ஆண்டு எழுத்தறிவித்தலுக்கான ஆயத்தப் பணிகள் இன்று (மகாளய அமாவாசை) துவங்கி உள்ளன. விழா விவரம்:

 

எழுத்தறிவித்தல் விழா 2023

 

நாள்: விஜயதசமி நன்னாள், 24.10.2023, செவ்வாய்க்கிழமை

நேரம்: காலை 9.00 மணி - 12.00 மணி.

இடம்: அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்பூர்.

 

இந்த ஆண்டு எழுத்தறிவிப்போர்: 

1. ஶ்ரீ. பி.பிரபாகரன், எழுத்தாளர், சென்னை

2. ஸ்ரீ. டாக்டர் எம்.எல்.ராஜா,  மருத்துவர், ஈரோடு

3. ஶ்ரீ. சுந்தரபாண்டியன், மேடைப் பேச்சாளர், திருப்பூர்

4. ஶ்ரீமதி. ஸ்ரீவித்யா, இசை ஆசிரியை, திருப்பூர்

5. ஶ்ரீ. கவிஞர் சு.சிவதாசன், திருப்பூர்.

 

முன்பதிவுக்கு: 

கவிஞர் ஶ்ரீ.பக்தவத்சலம்- 98422 27505

கு.சிவகுமார்- 98949 33877

.