திருப்பூரில் 11.08.2014 அன்று, அடையாறு ஆனந்தபவன் ஓட்டலில் அறம் அறக்கட்டளை நடத்திய பத்த்ரிகையாளர் சந்திப்பில் விநியோகிக்கப்பட்ட பத்திரிகை செய்தி...
தொல்லியல் கருத்தரங்கம்:
சுதந்திர தினத் திருவிழாவின் முதல்நாள் நிகழ்வாக, 14.08.2014, வியாழக்கிழமை, மாலை 5.00 மணியளவில், தொல்லியல், கல்வெட்டியல், மெய்யியல் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் சிற்ப்பு விருந்தினர்களாக, திருப்பூர், வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர் வே.நாகராஜ் கணேஷ்குமார், மொண்டிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ச.மு.ரமேஷ்குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டு, தொல்லியல் துறையின் மேனாள் தலைவர் புலவர் செ.இராசு, ‘அகழாய்வில் கொங்கு வரலாறு’ என்ற தலைப்பில் பேசுகிறார்.
சென்னை, தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவன நிர்வாகி எஸ்.ராமச்சந்திரன், ‘கொங்கு மண்டல கல்வெட்டுகள் காட்டும் சமூக அமைப்பு’ என்ற தலைப்பில் பேசுகிறார்.
கன்னியாகுமரி, விவேகான்ன்ந்த கேந்திரத்தின் ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன், ‘தமிழர் மெய்யியலும் நவீன அறிவியலும்; என்ர தலைப்பில் பேசுகிறார்.
தொழில்முனைவோர் கருத்தரங்கம்:
மறுநாள், 15.08.2014, வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் தேசியக் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து காலை 10.00 மணியளவில், திருப்பூர், வாசவி வித்யாலயம் நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகளின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
காலை 10.30 மணியளவில் துவங்கும் தொழில் முனைவோர் கருத்தரங்கம், இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் பிரிவின் தலைவர் ராஜா.எம்.சண்முகம், திருப்பூர் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சக்தி எம்.சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.
இதில், சென்னையைச் சேர்ந்த எழுத்தாளரும் தொழில் ஆலோசகருமான வெற்றி விடியல் ஸ்ரீநிவாசன் ‘திரைகடலோடியும்...’ என்ற தலைப்பில் பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தொழிலதிபர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
களப்பணியாளர்கள் அறிமுகம்:
சமுதாயப்பணிகளில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் ஆரவாரமின்றி உழைக்கும் இளம் தலைமுறையினரை அறிமுகப்படுத்தும் விதமாக, ஆகஸ்ட் 15, மதியம் 2.00 மணியளவில் களப்பணியாளர்கள் அறிமுகம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில் விவேகானந்த கேந்திரா ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன், சென்னையைச் சேர்ந்த சிற்பக்கலை ஆர்வலர் ஜி.சசிதரன், சென்னை ரீச் ஃபவுண்டேஷன் நிர்வாகி ஓகை நடராஜன் ஆகியோர் தங்கள் துறை சார்ந்த அனுபவங்களை முன்வைக்கின்றனர்.
இந்நிகழ்வின் இடையே, பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் அருள்புரம்- ஜெயெந்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, விஜயாபுரம்- பாரதி வித்யாபவன் சிபிஎஸ்இ பள்ளி, காங்கயம்- விவேகானந்த அகாடமி சிபிஎஸ்இ பள்ளி, ஆஷர் நகர் – வித்யாமந்திர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர்.
அறச்செம்மல் விருது:
சமூகத்திற்காக அர்ப்பண மனோபாவத்துடன் அரும்பணியாற்றும் சமூக சேவகர்களுக்கு ‘அறச்செம்மல்’ விருதினை கடந்த ஆண்டு முதல் அறம் அறக்கட்டளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான அறச்செம்மல் விருது, சென்னையில் இயங்கும் ‘சட்டப் பஞ்சாயத்து’ இயக்கத்தின் நிறுவனரும் பொதுச்செயலாளருமான செந்தில் ஆறுமுகம் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்வுக்கு, திருப்பூர்- மேகலா குழும நிறுவனங்களின் தலைவர் மேகலா சி.சுப்பிரமணியம், சண்முகானந்த சங்கீத சபாவின் தலைவர் வழக்குரைஞர் வி.வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விருதினை எழுத்தாளர் ஜோ டி குரூஸ் வழங்குகிறார்.
சுதந்திர தினப் பேருரை:
அறம் அறக்கட்டளையின் சுதந்திர தின விழாவில் தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களே நிறைவுரையாற்றி வருகின்றனர். இந்த ஆண்டு சுதந்திர தினப் பேருரையாற்றுகிறார், 2013அம் ஆண்டுக்கான சாஹித்ய அகாடமி விருது பெற்றவரும், ‘கொற்கை’, ‘ஆழிசூழ் உலகு’ புதினங்களின் ஆசிரியருமான எழுத்தாளர் ஜோ டி குரூஸ்.
திருப்பூர், ஸ்ரீபுரம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.விஜயகுமார் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இவ்விழாவில் பங்கேற்குமாறு அனைவரையும் அழைக்கிறோம்.
தொடர்புக்கு:
திரு. ஆடிட்டர். ச.சிவசுப்பிரமணியன் – 94437 04858
திரு. சு.சத்தியநாராயணன் – 98940 31101
திரு. கு.சிவகுமார் – 98949 33877
திரு. பாலசுப்பிரமணியம் – 99444 04499.
தினமணியில் வெளியான செய்தியின் நறுக்கு:
பத்திரிகை செய்தி
அறம் அறக்கட்டளை மூன்றாம் ஆண்டாக நடத்தும் சுதந்திர தினத் திருவிழா, திருப்பூர், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில், வரும் ஆகஸ்ட் 14, 15 தேதிகளில் (வியாழன், வெள்ளி) நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக