அறம் அறக்கட்டளை, திருப்பூர்,
திருப்பூர் ஸ்ரீ சக்தி இன்ஸ்டிட்யூஷன்ஸ்
இணைந்து நடத்தும்
ஏழாம் ஆண்டு எழுத்தறிவித்தல் விழா- 2018
திருப்பூரில் நலப்பணிகளை மேற்கொள்ள 2012-இல் நிறுவப்பட்டது அறம் அறக்கட்டளை (பதிவு எண்: 1432/ 2012). ‘அறத்தை நாம் காக்க அறம் நம்மைக் காக்கும்’ என்பதே எமது தாரக மந்திரம்.
தேசிய விழிப்புணர்வுப் பணிகளிலும் கல்விப் பணிகளிலும் ஈடுபட்டுவரும் அறம் அறக்கட்டளை, 2012 முதல் திருப்பூர் அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருகோயிலில் விஜயதசமி நன்னாளில் வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
விஜயதசமி நாளில் துவங்கும் எந்தச் செயலும் மாபெரும் வெற்றி பெறும் என்பது நமது நம்பிக்கை. எனவேதான் அந்நாளில் நமது குழந்தைகளுக்கு கல்விப் பயிற்சியின் துவக்கமான எழுத்தறிவித்தலை நடத்துகிறோம். ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்ற பழமொழி, நமது சமுதாயம் கல்விக்கு அளித்த மதிப்பை வெளிப்படுத்துகிறது.
அதிலும் குறிப்பாக, சரஸ்வதி கடாட்சம் பெற்ற எழுத்தாளர்கள், ஆசிரியர்களைக் கொண்டே எழுத்தறிவித்தல் நடத்தும் நமது பண்டைய பாரம்பரியத்தை மீட்டுருவாக்கும் வகையில், திருப்பூரில் அறம் அறக்கட்டளை நடத்தும் எழுத்தறிவிதல் விழாக்களில் எழுத்தாளர்களே தங்கள் பொற்கரங்களால் நமது குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கின்றனர்.
இதுவரை இந்நிகழ்வில் எழுத்தறிவித்த திருவாளர்கள்:
2012
- எழுத்தாளர் ஜெயமோகன்,
- ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன்,
- பேராசிரியர் ப.கனகசபாபதி,
- நடராஜ குருக்கள்,
2013
- எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ்,
- பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன்,
- தமிழ் ஹிந்து இணையதள நிர்வாகி ஜடாயு,
- ஆராய்ச்சியாளர் ம.வெங்கடேசன்,
- சமூகசேவகர் சரஸ்வதி (2013),
2014
- எழுத்தாளர் பெருமாள் முருகன்,
- கல்வெட்டு ஆய்வாளர் ராமச்சந்திரன்,
- எழுத்தாளர் சூத்திரதாரி கோபாலகிருஷ்ணன்,
- எழுத்தாளர் மோகனரங்கன்,
2015
- எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன்,
- எழுத்தாளர் சா.தேவதாஸ்,
- எழுத்தாளர் சு.வேணுகோபால்,
- கவிஞர் இசை,
2016
- எழுத்தாளர் நாஞ்சில்நாடன்,
- பேராசிரியர் ம.வே.பசுபதி,
- பாரதி இலக்கிய பயிலரங்க நிறுவனர் தஞ்சை வெ.கோபாலன்,
- எழுத்தாளர் பி.ஆர்.மகாதேவன்,
2017
- எழுத்தாளர் சாரு நிவேதிதா,
- பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன்,
- மருத்துவர் ஆர்.சுனில்கிருஷ்ணன்,
- கவிஞர் கோ.மகுடேஸ்வரன்
-ஆகியோர் பங்கேற்று நமது குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைத்துள்ளனர்.
இந்த ஆண்டு விஜயதசமியன்று (19.10.2018) நடைபெறும் எழுத்தறிவித்தல் விழாவில் பங்கேற்கும் திருவாளர்கள்...
இந்த ஆண்டு விஜயதசமியன்று (19.10.2018) நடைபெறும் எழுத்தறிவித்தல் விழாவில் பங்கேற்கும் திருவாளர்கள்...
- கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா,
- பத்திரிகையாளர் ராம.நம்பிநாராயணன்,
- ‘வலம்’ மாத இதழின் பொறுப்பாசிரியர் வி.ஹரன் பிரசன்னா,
- கனவு ஆசிரியர் ஆதலையூர் த.சூரியகுமார்,
- நல்லாசிரியை மு.கற்பகம் ராமசாமி
- ஆகியோர் இந்த ஆண்டு கலந்துகொண்டு, நெல்லில் அகரமும், குழந்தைகளின் நாவில் ஓங்காரமும் எழுதி, நமது குழந்தைகளின் கல்விப் பயணத்தை இனிதே துவக்கிவைத்து ஆசீர்வதிக்கின்றனர்.
இறையருளும் குருவருளும் துணைகொண்டு நமது குழந்தைகள் கல்வியில் உயர்ந்து, நாட்டின் சிறந்த குடிமக்களாக வேண்டும். இதுவே அறம் அறக்கட்டளையின் நோக்கம்; பிரார்த்தனை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக