வியாழன், 25 ஜூலை, 2013

சுதந்திர தினவிழா- 2013 - அழைப்பிதழ் வடிவம்



ஒற்றுமையேவலிமை!       தேசமே தெய்வம்!



சுதந்திர தினத் திருவிழா
அழைப்பிதழ்

நாள்: 15.08.2013, வியாழன்  
      
நேரம்: காலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 

இடம்: ஹார்வி குமாரசாமி கல்யாண மண்டபம், திருப்பூர்

***

நிகழ்ச்சி நிரல்
  • சுதந்திர தினப் பேரணி – காலை 8.00 மணி
  • தேசியக் கொடியேற்றம் – காலை 9.00 மணி
  • சுதந்திர தினக் கண்காட்சி துவக்கம் – காலை 9.15 மணி
  • தேசபக்திப் பாடல்கள் – காலை 9.30 மணி
  • மாற்றுக் கல்வி – கருத்தரங்கம் – காலை 10.15 மணி
  • பள்ளி மாணவர் கலை நிகழ்ச்சி – பிற்பகல் 12.15 மணி
  • கல்லூரி மாணவர் கருத்தரங்கம் – பிற்பகல் 1.45 மணி
  • பள்ளி மாணவர் கலை நிகழ்ச்சி – பிற்பகல் 2.30 மணி
  • ஊடகம் செல்ல வேண்டிய பாதை – கருத்தரங்கம் – மாலை 3.45 மணி
  •  பள்ளி மாணவர் கலை நிகழ்ச்சி – மாலை 5.45 மணி
  • மாணவர்களுக்கு பரிசளிப்பு, சுதந்திர தினப் பேருரை – மாலை 6.15 மணி
  • சமூக சேவகர்களுக்கு விருது, நிறைவுரை – இரவு 7.30 மணி
  • நாட்டுப் பண் – இரவு 9.00 மணி

வாருங்கள் சுதந்திரத்தைக் கொண்டாடுவோம் !
வாருங்கள் திருப்பூரை மேலும் வளப்படுத்துவோம் !



நிகழ்ச்சி நிரல்

நாள்: 15.08.2013, வியாழக்கிழமை.

1.சுதந்திர தினப் பேரணி
  • துவக்கம் காலை 8.00 மணி.

ரயில் நிலையம் எதிரில் உள்ள திருப்பூர் குமரன் சிலை முன்பு துவங்கி, மாநகராட்சி வளாக மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செய்து- அங்கிருந்து ஹார்வி குமாரசாமி மண்டபம் சேர்தல்.

தலைமை: திரு. K.P. கோவிந்தசாமி,  
தலைவர், திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம்.

முன்னிலை:

திரு. D. லிங்க்ஸ் சௌகத் அலி,
டி.கே.டி கல்வி நிறுவனம், திருப்பூர்.

மருத்துவர் திரு. K.கிங்,
முன்னாள் தலைவர், தமிழ்நாடு அரசு ஹோமியோபதி மருத்துவர் சங்கம்,  

திரு. A.செந்தில்குமார்,
கிரீன் அண்ட் கிளீன் அமைப்பு, திருப்பூர்

திருமதி ராஜாத்தி சந்தானகிருஷ்ணன்
இன்னர்வீல் சங்கம், திருப்பூர்.

துவக்கிவைப்பவர்: திருமதி சுமன் சந்திரகுமார் ஆஷர்
                  சுதந்திரப் போராட்ட வீரரின் வாரிசு, திருப்பூர்




2. தேசியக் கொடி ஏற்றுதல்
  • காலை 9.00 மணி.

தலைமை: திரு. M. ரத்தினம் செட்டியார்,
தலைவர், அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம், திருப்பூர்.

முன்னிலை:  திரு.T.R. விஜய்குமார்,
ஒருங்கிணைப்பாளர், திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு.

கொடியேற்றுபவர்:  திரு. P.R.சண்முகம்,
         சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் வாரிசு, திருப்பூர்




3. சுதந்திர தினக் கண்காட்சி துவக்கம் 

  • காலை 9.15 மணி.
தமிழ்த்தாய் வாழ்த்து

தலைமை: திரு. O.K.கந்தசாமி,
மாநில துணைத் தலைவர், காந்திய மக்கள் இயக்கம்.

முன்னிலை: திரு. K.A.P.சிவகுமார்,
ஹார்வி குமாரசாமி மண்டப அறக்கட்டளை

துவக்கிவைப்பவர்: திரு. C.சுப்பிரமணியம்,
தலைவர், மேகலா குழும நிறுவனங்கள், திருப்பூர்.




4. தேசபக்திப் பாடல்கள்
  • காலை 9.30 – 10.00 மணி.
கோவை சகோதரிகள் செல்வி S.வானதிஸ்ரீ, செல்வி S.வித்யாலக்ஷ்மி




தேநீர் இடைவேளை- காலை 10.00- 10.15 மணி




5. மாற்றுக் கல்வி குறித்த கருத்தரங்கம் 
  • காலை 10.15- 12.15 மணி.
தலைமை: திரு. அகில் S. ரத்தினசாமி,
தலைவர், பின்னலாடைத் துணி உற்பத்தியாளர் சங்கம், திருப்பூர்.

முன்னிலை: திரு. செ. இளமாறன், 
முதல்வர், பார்க் கல்லூரி, பழங்கரை, திருப்பூர்.

சிறப்புரையாளர்கள்:

1.       பேரா. ப.கனகசபாபதி
முன்னாள் இயக்குனர், நகரியல் கல்வி மையம், கோவை.
2.       பேரா. இரா.ஸ்ரீனிவாசன்
சாஸ்திரா பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
3.       திருமதி. சங்கீதா ஸ்ரீராம்
எழுத்தாளர், சென்னை.
4.       மருத்துவர் செ.சதீஷ்குமார்
தேசிய செயலாளர், ஏகல் வித்யா கேந்திரம், கோவை
5.       திரு. மு.சிவலிங்கம்
முதுநிலை துணை ஆசிரியர், ஜெயா டி..வி, சென்னை




6. பள்ளி மாணவர் கலைநிகழ்ச்சி- 1 
  • மதியம் 12.15- 1.15 மணி.
தலைமை: திரு.K.P.K.செல்வராஜ்,
தலைவர், திருப்பூர் முத்தமிழ் சங்கம்

முன்னிலை: ஆடிட்டர் V. விட்டல்ராஜன்,  
தாளாளர், வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர்.

கலந்துகொள்வோர்:

வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆஷர்நகர்,

              விவேகானந்தா வித்யாலயா- செட்டிபாளையம்

விவேகானந்தா அகாடமி, காங்கயம்




உணவு இடைவேளை- மதியம் 1.15 – 1.45 மணி




7. கல்லூரி மாணவர் கருத்தரங்கம்
  • மதியம் 1.45- மாலை 2.30 மணி.
தலைமை: திரு. M.சண்முகம்,
மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர், திருப்பூர் மாவட்டம்

முன்னிலை: வழக்குரைஞர் திரு. V.வீரராகவன்,
தலைவர், ஷண்முகானந்த சங்கீத சபா, திருப்பூர்

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் உரை:

சிறப்புரை: திரு. சுப்பு, பத்திரிகையாளர், சென்னை.




8. பள்ளி மாணவர் கலைநிகழ்ச்சி- 2 
  • மாலை 2.30 – 3.30 மணி.
தலைமை: . திரு. K.கிருஷ்ணன்,
தலைவர், ஜெயந்தி கல்வி அறக்கட்டளை, அருள்புரம்

முன்னிலை: திரு. A.பாலசுந்தரம்,
தாளாளர், சுவாமி விவேகானந்தா வித்யாலயா, கொடுவாய்

கலந்துகொள்வோர்:

ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அருள்புரம்         
விகாஸ் வித்யாலயா, கூலிபாளையம் 
ராமகிருஷ்ணா வித்யாலயா, அம்மாபாளையம்,




தேநீர் இடைவேளை- மாலை 3.30- 3.45 மணி




9. ஊடகம் செல்ல வேண்டிய பாதை - கருத்தரங்கம்
  • மாலை 3.45 – 5.45 மணி.
தலைமை: சுப்ரபாரதிமணியன்,
எழுத்தாளர், திருப்பூர்.

முன்னிலை: திரு. கீதாஞ்சலி கோவிந்தப்பன்,
துணைத் தலைவர், தென் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சஙகம், திருப்பூர்.

சிறப்புரையாளர்கள்:

1.       திரு. திருச்சி சிவா, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்.  
2.       திரு. ராம.நம்பிநாராயணன், பொறுப்பாசிரியர், சுதேசி செய்தி, சென்னை.
3.       திரு. அரவிந்தன் நீலகண்டன், ஆராய்ச்சியாளர், நாகர்கோவில்.
4.       திரு. கோ.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள், சென்னை.
5.       திரு. ம.கொ.சி.ராஜேந்திரன், தேசிய சிந்தனைக் கழகம், சென்னை




10. பள்ளி மாணவர் கலைநிகழ்ச்சி- 3
  • மாலை 5.45- இரவு 6.15 மணி.
தலைமை: திரு. N.சிதம்பரம்,
முயற்சி மக்கள் அமைப்பு, திருப்பூர்

முன்னிலை: திரு. S.தியாகராஜன்,
உப தலைவர், விவேகானந்த வித்யாலயா, கே.செட்டிபாளையம், திருப்பூர்

கலந்துகொள்வோர்:

காது கேளாதோர் பள்ளி மாணவர்கள், கோதபாளையம்.



11. மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
  • இரவு 6.15 – 7.30 மணி
தலைமை: திரு. S.குணசேகரன்,
துணை மேயர், திருப்பூர் மாநகராட்சி

முன்னிலை: திரு. T.R.முரளிதரன்,
மாவட்டத் தலைவர்,  முன்னாள் ராணுவவீரர் கூட்டமைப்பு.

பரிசு வழங்குபவர்:சக்தி  M. சுப்பிரமணியம்,
தலைவர், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், திருப்பூர்.

சுதந்திரதின விழாப் பேருரை: திரு. திருப்பூர் கிருஷ்ணன்,
ஆசிரியர், அமுதசுரபி, சென்னை




12. சமூகசேவகர்களுக்குப் பாராட்டு விழா 
  • இரவு 7.30- 9.00 மணி.
தலைமை: திரு. ராஜா சண்முகம்,
தலைவர், நிப்ட் –டீ கல்லூரி, திருப்பூர்.

முன்னிலை: திரு. கிருஷ்ணசாமி,
வளம் அமைப்பு, திருப்பூர்

அறம் விருது வழங்குபவர் : திரு. K.ஆறுமுகம், (தி சென்னை சில்க்ஸ்)
                தலைவர், அறிவுத் திருக்கோயில், கருவம்பாளையம்

விருது பெறுவோர்:

1.       மருத்துவர் திரு. செ.சதீஷ்குமார்ஹேமா சதீஷ்குமார்,
 ஏகல் வித்யா கேந்திரம்
2.       மருத்துவர் திரு. R.சுநீல்கிருஷ்ணன்
காந்தி இன்று- இணையதள நிர்வாகி, காரைக்குடி
3.       திரு. P.மகேந்திரன்
ஈரநெஞ்சம் அறக்கட்டளை கோவை.
4.       திரு. G.சசிதரன்
பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு அமைப்பு, சென்னை.
5.       திரு. K.செந்தில்நாதன்
விவேகானந்தா சேவாலயம், திருப்பூர்.
6.       காந்தியவாதி திரு. சசிபெருமாள்,
மதுவுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, சேலம்.

சிறப்புரை:   திரு. ஜெயமோகன், எழுத்தாளர், நாகர்கோவில்




நாட்டுப்பண் -  இரவு 9.00 மணி




நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்: 
  • திரு. ஆதலையூர் த.சூரியகுமார், ஆசிரியர், மதுரை.
  • திருமதி. வளர்மதி ஜெயசந்திரன், ஆசிரியை, ஈரோடு.

செவ்வாய், 16 ஜூலை, 2013

சுதந்திர தினவிழா 2013- கல்லூரி மாணவருக்கு கருத்தரங்குகள்


சென்ற ஆண்டு திருப்பூரில் உள்ள 50-க்கு மேற்பட்ட பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து 12 மணி நேர சுதந்திர தின விழா நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அறம் அறக்கட்டளை அமைக்கப்பட்டது. தற்போது, அறம் அறக்கட்டளை சார்பில், இந்த ஆண்டு சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த ஆண்டு, திருப்பூர், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் ஆகஸ்டு 15, வியாழக்கிழமை, காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கான  இரு கருத்தரங்குகளை நடத்தப்படுகிறது.  அது குறித்த விவரங்கள்:

  • சுதந்திர தின விழாவை வெறும் சடங்காகக் கொண்டாடாமல், உளப்பூர்வமாக, நாட்டின் வளர்ச்சிக்கு அதை பயன்படுத்தும் விதமாக இந்தக் கருத்தரங்குகளை அறம் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. 

  • இக்கருத்தரங்குகளில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், திருப்பூரில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் இடம் பெறும் கருத்தரங்கில் தங்கள் உரைகளை நிகழ்த்த அழைக்கப்படுவார்கள். 

1. கருத்தரங்குகளின் விவரம்:


இரு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறும். அவை:

1. இளைஞர்களின் இதயக்குரல்:


தற்போது நாடு சந்தித்துவரும் சவால்களுக்கு என்ன தீர்வு என்பது குறித்த மாணவ சமுதாயத்தினரின் கருத்துக்களைத் தொகுக்கும் விதமாக இத்தலைப்பில் கருத்தரங்கு நடைபெறும். இதன் துணைத் தலைப்புகள்:
  • அ) அடுத்து நாட்டின் ஆட்சியாளராக வருபவரிடம் எதிர்பார்ப்பது என்ன?
  • ஆ) நமது தேர்தல் முறைகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.


2. திருப்பூரின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள்:


தமிழகத்தின் புதிய மாவட்டமான திருப்பூரின் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்பது குறித்த மாணவ சமுதாயத்தினரின் கருத்துகளைத் தொகுக்கும் விதமாக இத்தலைப்பில் கருத்தரங்கு நடைபெறும். இதன் துணைத் தலைப்புகள்:

  • அ) உள்கட்டமைப்பின் தேவைகள்.
  • ஆ) தொழில்துறை வளர்ச்சி
  • இ) விவசாயத்தைக் காப்போம்!
  • ஈ) சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்
  • உ) தன்னிறைவு அடைவோம்!

2. கருத்தரங்குகளின் விதிமுறைகள்:


  • அ) விருப்பமுள்ள மாணவ மாணவிகள் தங்கள் பெயர்களை கல்லூரி விவரங்களுடன் தொலைபேசியில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். 
  •  முன்பதிவு செய்வதற்கான தொலைபேசி எண்: 98940 31101 
  • முன்பதிவு செய்வதற்கு கடைசிநாள்: ஜூலை 25.
  • ஆ) இந்தக் கருத்தரங்குகளில் பங்கேற்பவர்கள் தங்கள் கருத்துக்களை எழுத்துவடிவில், முன்னதாகவே ஜூலை 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதில் கல்லூரி முதல்வரின் ஒப்புதல் இணைக்கப்பட வேண்டும்.
  • இ) இரு கருத்தரங்குகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே மாணவர்கள் கலந்துகொள்ள முடியும். மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள தலைப்பை குறிப்பிட்டு முன்பதிவு செய்வதும், கட்டுரைகளை அனுப்புவதும் முக்கியமானதாகும். உதாரணமாக, முதல் தலைப்பில் இரண்டாம் பிரிவைத் தேர்வு செய்பவர் “1-ஆ” என்று குறிப்பிட வேண்டும்.
  • ஈ) தனிநபர் மீதான தாக்குதல்கள், அரசியல் சார்பு நிலைப்பாடுகள், வெறுப்பை உமிழும் சொற்கள் தவிர்க்கப்பட வேண்டும். 
  • உ) கருத்தரங்கில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கால அளவு: 10 நிமிடங்கள்: 

3. கருத்தரங்குகளின் நடைமுறை:


  • அ) மாணவ மாணவியரின் கட்டுரைகளை ஆய்வு செய்ய கல்லூரிப் பேராசியர்கள் கொண்ட இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அவற்றைப் பரிசீலித்து கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுப்பார்கள்.
  • ஆ) இரு கருத்தரங்குகளும் இரு வேறு இடங்களில் தனித்தனியே நடைபெறும். அந்த இடங்கள் குறித்த விவரம், கருத்தரங்கு தினத்துக்கு இரு நாட்கள் முன்னதாக அறிவிக்கப்படும்.
  • இ) கருத்தரங்கிற்கு மாணவ மாணவிகளே தங்கள் சொந்த ஏற்பாட்டில் வந்து செல்ல வேண்டும். 
  • ஈ) இரு கருத்தரங்குகளிலும் தங்கள் கருத்துக்களைத் திறம்பட முன்வைக்கும் மாணவ மாணவியர், திருப்பூரில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் விருந்தினர்கள் முன்னிலையில் தங்கள் கருத்துக்களை முன்வைக்க அழைக்கப்படுவர்.
  • உ) கருத்தரங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.

4. மேலும் விவரங்களுக்கு:


சுதந்திர தினவிழா, கருத்தரங்குகள் குறித்து மேலும் அறிய, கீழ்க்கண்ட முகவரியை அணுகலாம்:

ஆடிட்டர் திரு. C.சிவசுப்பிரமணியன் (தலைவர்),

அறம் அறக்கட்டளை, திருப்பூர் (பதிவு எண்: 1432/2012),
36/24 - பின்னி காம்பவுண்ட் மெயின் ரோடு, குமரன் சாலை, திருப்பூர் – 641601,

 போன்: 94437 04858. 
 மின்னஞ்சல்: aramtirupur@gmail.com 
 வலைப்பூ: http://aramtirupur.blogspot.in 
 முகநூல்: http://www.facebook.com/idcc.tirupur

அலைபேசியில் தொடர்பு கொள்க:

திரு. S.நாராயணன்: 98940 31101

திரு. G.ஹரிபிரசாத்: 99948 82748

திரு. பாலசுப்பிரமணியம்: 99444 04499

திரு. D.சீனிவாசன்: 99446 66677