(படத்தின் மீதி சொடுக்கினால் பெரிதாகத் தெரியும்) |
சுவாமி விவேகானந்தா ஐ.ஏ.ஸ். அகாடமி, கோவை, சங்கல்ப் ஐ.ஏ.எஸ். போரம்- புதுடில்லி அமைப்புகளுடன் இணைந்து, அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாகவும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் விதமாகவும், மாணவர்களுக்கான் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பு துவக்க விழாவை இந்நாளில் அறம் அறக்கட்டளை நடத்துகிறது.
திருப்பூர், சின்னக்கரையில் உள்ள பார்க் கலை அறிவியல் கல்லூரியில் 06.12.2012, வியாழக்கிழமை, காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்நிகழ்வு ஏற்பாடாகி உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு, அறம் அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் ச.சிவசுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். பார்க் கலை அறிவியல் கல்லூரியின் செயலர் பி.ரகுராஜன், சி.பி.சி. பேஷன்ஸ் நிறுவன இயக்குனர் டி.ஆர். விஜய்குமார் ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர்.
கோவை ஐ.ஏ.எஸ். அகாடமியின் செயலர் ந.பாரதி ஐ.ஏ.எஸ். பயிற்சியைத் துவக்கிவைத்து, பயிற்சியின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கிறார். சென்னையைச் சார்ந்த தனித்திறன் பயிற்சியாளர் ஜா.ராஜகோபாலன் சிறப்புரையாற்றுகிறார்.
நிகழ்வின் இறுதியாக, திருப்பூர் வழக்கறிஞர் அ.பார்த்திபன் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தி, நிறைவுரையாற்றுகிறார். அறம் அறக்கட்டளை உறுப்பினர் வீர.ராஜமாணிக்கம் நன்றி கூறுகிறார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வட்டாரத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக