ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

சுதந்திர தின விழா- தினமணி செய்தி 1

தினமணி செய்தி 16.08.2013

சமுதாய ஒழுக்கத்திற்கு தனிமனித ஒழுக்கம் அவசியம்

-திருப்பூர் கிருஷ்ணன்


திருப்பூர்,  ஆக. 15:  சமுதாய  ஒழுக்கத்திற்கு தனிமனித ஒழுக்கம் அவசியம் என்று திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் திருப்பூர் கிருஷ்ணன் வியாழக்கிழமை பேசினார் (படம்).

 திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் சுதந்திர தினவிழா காலை 8 முதல் இரவு 9 மணி வரை கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.

 இதன் ஒருபகுதியாக மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு துணை மேயர் சு.குணசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் ராணுவவீரர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் டி.ஆர்.முரளிதரன் முன்னிலை வகித்தார்.

  இதில், சுதந்திர தினவிழா பேருரையில் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பேசியது:

 காந்தியக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். மது குடிக்கும் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் மீள வேண்டும். மது குடிக்காததால் மதுக்கடைகள் நஷ்டமடைந்து, அவற்றை அரசு தானாக மூட வேண்டிய நிலை உருவாக வேண்டும்.

மது தான் எல்லா பாவங்களுக்கும் காரணமாக அமைகிறது. அரசு மதுக்கடைகளை நடத்துவது என்பது தன் பசிக்காக தன் உடலை வெட்டிச் சாப்பிடுவது போன்றது.

 மது அருந்தி வரும் ஆண்களைத் திருத்த வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு உள்ளது. மது குடித்து வரும் ஆண்களை ஏன் பெண்கள் துரத்தி அடிக்கக் கூடாது? மருத்து அருந்தக் கூடாது என்று நாம் உறுதிமொழியேற்க வேண்டும்.

தனி மனித ஒழுக்கம் தான் சமுதாய ஒழுக்கத்திற்கு அடிப்படை. எனவே, சமுதாய ஒழுக்கத்திற்கு தனி மனித ஒழுக்கம் அவசியம். ஆன்மிகம், நாத்திகம் என ஒவ்வொருவரும் எந்த ஒரு பாதையில் சென்றாலும் அதில் தனிமனித ஒழுக்கம் இருக்க வேண்டும். இதற்கு தன் உறுதியுடன் செயல்பட வேண்டும். எந்த பாதையில் செல்கிறோம் என்று சிந்தனை தோன்றுவதற்கு  இதுபோன்ற நல்ல விழாக்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றார்.

அறம் அறச்செம்மல் விருது: அறம் அறக்கட்டளை சார்பில் சமூக சேவகர்களுக்கு இந்தாண்டு முதல் ஆண்டு முதல் அறச்செம்மல் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, இவ்விழாவில் சமூக சேவகர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

 இதில், பழங்குடியின மக்களுக்காகப் பணியாற்றி வரும் ஏகல் வித்யா கேந்திரம் மருத்துவர் செ.சதீஷ்குமார், ஹேமா சதீஷ்குமார், காரைக்குடி, காந்தி இன்று- இணையதள நிர்வாகி ஆர்.சுனில்கிருஷ்ணன், கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் பி.மகேந்திரன், சென்னை பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி ஜி.சசிதரன், மதுவுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு காந்தியவாதியான சசிபெருமாள் ஆகியோருக்கு அறச்செம்மல் விருதுகளை எழுத்தாளர் ஜெயமோகன் வழங்கினார்.

 இதற்கான ஏற்பாடுகளை அறம் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

நன்றி:  தினமணி (16.08.2013)

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

சுதந்திர தின விழா சுவரொட்டி

அறம் அறக்கட்டளை நடத்தும் சுதந்திர தினத் திருவிழா தொடர்பாக கீழ்க்கண்ட சுவரொட்டி (500 எண்ணிக்கை) திருப்பூர் நகரில் ஒட்டப்பட்டுள்ளது.


வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

சுதந்திர தின விழா ஃபிளக்ஸ் விளம்பர பேனர்கள்- 2

அறம் அறக்கட்டளை நடத்தும் சுதந்திர தின விழா தொடர்பான 10 X 6 அளவுள்ள  ஃபிளக்ஸ் விளம்பர பேனர்கள் திருப்பூரில் 20 இடங்களில் வைக்கப்பட உள்ளன.  அவற்றின் வடிவங்கள் கீழே...








விளம்பர உதவி: கிளாசிக் போலோ நிறுவனம், திருப்பூர்.

சுதந்திர தின விழா ஃபிளக்ஸ் விளம்பர பேனர்கள்

அறம் அறக்கட்டளை நடத்தும் சுதந்திர தின விழா தொடர்பான 10 X 6 அளவுள்ள  ஃபிளக்ஸ் விளம்பர பேனர்கள் திருப்பூரில் 20 இடங்களில் வைக்கப்பட உள்ளன.  அவற்றின் வடிவங்கள் கீழே...

இவற்றுக்கு  விளம்பர உதவி செய்த 'கிளாசிக் போலோ' நிறுவனத்திற்கு நன்றி!












புதன், 7 ஆகஸ்ட், 2013

கல்லூரி மாணவர் ஆய்வரங்கம்







அறம் அறக்கட்டளை நடத்தும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு,  கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ஆய்வரங்கம், திருப்பூர், சின்னக்கரை, பார்க் கலை, அறிவியல் கல்லூரியில் 05.08.2013, திங்கள் கிழமை நடைபெற்றது.

இந்த ஆய்வரங்கம் தொடர்பாக ஏற்கனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

காண்க: சுதந்திர தினவிழா 2013- கல்லூரி மாணவருக்கு கருத்தரங்குகள்

அதன்படி முன்பதிவு செய்து ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த கல்லூரி மாணவ மாணவியருக்கான நிகழ்வாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது. மாணவ மாணவியர் தாங்கள் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகள் குறித்து நிபுணர் குழு முன்பு விளக்கம் அளித்தனர்.

இந்நிகழ்வை  பார்க் கல்லூரி முதல்வர் திரு. செ. திருமாறன் துவக்கிவைத்தார். அறம் அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் திரு. சி.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொருளாளர் திரு. எஸ்.நாராயணன் வரவேற்றார்.

ஆய்வுக் கட்டுரைகளை பரிசீலிக்கும் நடுவர் குழுவாக, தர்ம ரக்‌ஷண சமிதியின் மாநிலச் செயலாளர் திரு. கிருஷ்ண. ஜகநாதன், லோக்சத்தா கட்சியைச் சார்ந்தவரும்,  சட்ட பஞ்சாயத்து அமைப்பின் நிறுவனருமான  திரு. செந்தில் ஆறுமுகம், வழக்கறிஞர் திரு. அ.பார்த்திபன், சிறுதொழிலதிபர் திரு. கு. சிவகுமார் ஆகியோர் செயல்பட்டனர்.

இந்த நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளின் ஆய்வுக் கட்டுரைகள் சுதந்திர தின விழாவில் மேடையில் சமர்ப்பிக்கப்படும்.

இந்த நிகழ்வு குறித்த பத்திரிகை செய்தி கீழே...

தினமணி 06.08.2013


ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

தினமணி செய்தி - 31.07.2013

தினமலர் செய்தி
31.07.2013
அறம் அறக்கட்டளை சார்பில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி நடத்தி, சுதந்திர தின விழாவில் பரிசளிக்க உள்ளோம்.

‘சுவாமி விவேகானந்தரின் தேசபக்தி’ என்ற தலைப்பில் 6 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதப்பட வேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவிகள் பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒப்புதலுடன் ஆகஸ்ட் 9-ம் தேதிக்குள் எமது முகவரிக்கு அஞ்சலிலோ, நேரிலோ சேர்க்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்; பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் அளிக்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

ஆடிட்டர் திரு. சி. சிவசுப்பிரமணியன்
தலைவர், 
அறம் அறக்கட்டளை, திருப்பூர். 
36/24 - பின்னி காம்பவுண்ட் மெயின் ரோடு, 
குமரன் சாலை, திருப்பூர் – 641601, 
போன்: 94437 04858, 
மின்னஞ்சல்: aramtirupur@gmail.com                                                                                                                          

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

சுதந்திர தின விழா அழைப்பிதழ்- 2013

அறம் அறக்கட்டளை, திருப்பூர் நடத்தும் சுதந்திர தின விழாவின் அழைப்பிதழ் இது. அழைப்பிதழை தெளிவாகப் படிக்க, படத்தின் மீது சொடுக்கவும்.



குறிப்பு:

இந்த அழைப்பிதழுக்கு விளம்பர உதவி செய்த
VVRS CHITFUND Tamilnadu Private Limited,  மற்றும்
SHAFA YARNS நிறுவனங்களுக்கு நன்றி.