அறம் அறக்கட்டளை நடத்தும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ஆய்வரங்கம், திருப்பூர், சின்னக்கரை, பார்க் கலை, அறிவியல் கல்லூரியில் 05.08.2013, திங்கள் கிழமை நடைபெற்றது.
இந்த ஆய்வரங்கம் தொடர்பாக ஏற்கனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
காண்க: சுதந்திர தினவிழா 2013- கல்லூரி மாணவருக்கு கருத்தரங்குகள்
அதன்படி முன்பதிவு செய்து ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த கல்லூரி மாணவ மாணவியருக்கான நிகழ்வாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது. மாணவ மாணவியர் தாங்கள் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகள் குறித்து நிபுணர் குழு முன்பு விளக்கம் அளித்தனர்.
இந்நிகழ்வை பார்க் கல்லூரி முதல்வர் திரு. செ. திருமாறன் துவக்கிவைத்தார். அறம் அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் திரு. சி.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொருளாளர் திரு. எஸ்.நாராயணன் வரவேற்றார்.
ஆய்வுக் கட்டுரைகளை பரிசீலிக்கும் நடுவர் குழுவாக, தர்ம ரக்ஷண சமிதியின் மாநிலச் செயலாளர் திரு. கிருஷ்ண. ஜகநாதன், லோக்சத்தா கட்சியைச் சார்ந்தவரும், சட்ட பஞ்சாயத்து அமைப்பின் நிறுவனருமான திரு. செந்தில் ஆறுமுகம், வழக்கறிஞர் திரு. அ.பார்த்திபன், சிறுதொழிலதிபர் திரு. கு. சிவகுமார் ஆகியோர் செயல்பட்டனர்.
இந்த நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளின் ஆய்வுக் கட்டுரைகள் சுதந்திர தின விழாவில் மேடையில் சமர்ப்பிக்கப்படும்.
இந்த நிகழ்வு குறித்த பத்திரிகை செய்தி கீழே...
தினமணி 06.08.2013 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக