வியாழன், 25 அக்டோபர், 2012

விஜயதசமி சிறப்புச் சொற்பொழிவு படங்கள்...


அறம் அறக்கட்டளை சார்பில், விஜயதசமியன்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை, திருப்பூர், கருவம்பாளையத்தில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில், விஜயதசமி சிறப்புச் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. இதில் எழுத்தாளர்கள் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், 'கம்ப ராமாயணத்தில் அறம்' என்ற தலைப்பில் இணைய எழுத்தாளர் ஜடாயு, 'உபநிடதங்களில் அறம்' என்ற தலைப்பில் ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன்,  'கல்வியும் ஞானமும்' என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகனும் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சிக்கு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் சக்தி எம்.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். சன்மார்க்க சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.பி.கே.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.  அறம் அறக்கட்டளை உறுப்பினர் வழக்குரைஞர் பார்த்திபன் வரவேற்றார். அறக்கட்டளை உறுப்பினர் வி.சத்யன் நன்றி கூறினார்.காண்க:  
அணையா விளக்கு (ஜெயமோகன் இணையதளத்தில் வெளியாகி உள்ள கட்டுரை)
.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக