திருப்பூர் அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோவிலில் விஜயதசமியன்று (24.10.2012), புதன் கிழமை காலை 7.20 மணி முதல் 10.10 மணி வரை எழுத்தறிவித்தல் சிறப்பாக நடைபெற்றது
இவ்விழாவுக்கு அருள்நெறி திருக்கூட்டத்தின் தலைவர் ரத்தினம் செட்டியார் தலைமை வகித்தார். ஈஸ்வரன் கோவில் அர்ச்சகர் நடராஜ குருக்கள் தட்சிணாமூர்த்தி சந்நிதியில் ஒரு குழந்தைக்கு எழுத்தறிவித்து நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தார். அலகுமலை ஸ்ரீ தபோவனம் நிறுவனர் ஸ்வாமினி குகப்பிரியானந்த சரஸ்வதி ஆசி வழங்கினார்.
தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகன், பேராசிரியர் ப.கனகசபாபதி, ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன், இணைய எழுத்தாளர் ஜடாயு ஆகியோர் குழந்தைகளின் நாவில் தேனால் எழுதி வித்யாரம்பம் செய்துவைத்தனர்; குழந்தைகள் நெல்லில் 'அ' என்று எழுதி தங்கள் கல்வியை துவக்கினர். 200 க்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்று சான்றோரின் ஆசி பெற்றனர்.
காண்க:
ஏடு தொடங்கல் (ஜெயமோகன் இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக